Monday, December 3, 2012

விண்வெளியில் ஒரு தோட்டம்: நிலவில் காய்கறிகள் பயிரிட சீன விண்வெளி வீரர்கள் திட்டம் !



பூமிக்கு அப்பால் நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் காய்கறிகளை வளர்க்க முடியும் என்று பெய்ஜிங்கைத் தலைமையிடமாகக் கொண்ட சீன விண்வெளி ஆய்வு மற்றும் பயிற்சி மையம் கண்டுபிடித்துள்ளது. ஒரு மூடிய அமைப்பில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீர் ஆகியவை மக்களுக்கும் தாவரங்களுக்கும் சமநிலையில் கிடைக்கும் வகையில் சோதனை நடத்தப்பட்டது.

300 கன மீட்டர் கொண்ட மூடப்பட்ட கேபினில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையின்போது 2 பேருக்குத் தேவையான காற்று, தண்ணீர் மற்றும் உணவு வழங்கலில் அது உருவாக்கப்பட்டிருந்தது. அங்கு 4 வகையான காய்கறிச் செடிகள் வளர்ந்தன. அவை கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு, உள்ளே இருந்த 2 பேருக்குத் தேவையான ஆக்சிஜனையும் கொடுத்தன.

இதன்மூலம், அவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை அறுவடை செய்ய முடியும். சீனாவின் விண்வெளித் திட்டத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு இந்தப் பரிசோதனை மிகவும் முக்கியம் ஆகும் என்று ஆய்வு நிறுவனத் துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்தார்.

ஒரு கட்டுப்படுத்தப்பட்ட, அதாவது வேற்றுக் கிரகச் சூழல் இருக்கும்படி உருவாக்கப்பட்ட இந்த கேபின், எதிர்காலத்தில் நிலவு மற்றும் செவ்வாய்க் கிரகதத்தில் பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி :- மாலைமலர். 03-12-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.