Sunday, December 2, 2012

குற்றால அருவியிலே....! -செவல்குளம் ஆச்சா





அருவி நீர்: உடல் வலிமையையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும். பித்த, ரத்த சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.

ஆற்று நீர்: நாவறட்சியைப் போக்கும். வாதம், பித்தம், குணமாகும்.
ஊற்று நீர்: பித்தம், நாவறட்சி அகற்றும்.

ஏரி நீர்: வாயுவை உண்டாக்கும்.

உப்பு நீர்:  குடல்நோய், வாயு ஆகியவற்றைக் குணமாக்கும்.

குளத்து நீர்: வாத நோயை அதிகப்படுத்தும். நீருற்றுப் போக்குள்ள குளமாக இருப்பின் உடலுக்கு நலம் தரும்.

அல்லிக் குளநீர்: அஜீரண வயிற்றுப்போக்கை உண்டாக்கும். சொறி, புண் இவற்றை ஏற்படுத்தும். 

கடல் நீர்: ரத்த குன்மம், உடல் வலி, பெருநோய், வயிற்றுக் கோளாறு, நுரையீரல் கோளாறு போன்றவற்றைக் குணமாக்கும். கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் மலநீர்க்கட்டு, உடல் கடுப்பு, நாக்குப் பிடிப்பு, சோர்வு, பல் நோய் முதலியவை குணமாகும்.

காடி நீர்: மருந்துத்தன்மை இதில் உண்டு. அஜீரணம், சோகை, பித்த மயக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

பாசி நீர்: இதனைப் பருகினால் உடலில் தடிப்புகள் தோன்றும். குடல் கோளாறுகள் ஏற்படும். தோல் வியாதிகள் ஏற்படும்.

பனி நீர்: சிறுநீர் பெருக்கும். உடல் வறட்சி போக்கும். கண்படலம், வயிற்றுப்போக்கு, சொறி, கரப்பான் ஆகிய நோய்களைக் குணப்படுத்தும்.

பாறை நீர்: குளிர்ச்சியை உடலில் ஏற்படுத்தும். காய்ச்சல் உண்டாகும்.

சுக்கான் பாறை நீர்: கோளை, நீர்க்கோவை, சளி போன்றவற்றைக் குணப்படுத்தும். நீர்க்கடுப்பு உண்டாக்கும்.

கரும்பாறை நீர்: அறிவாற்றல் பெருகும். உடலில் அழகு உண்டாகும். மயக்கம், வயிற்றுப்போக்கு, பித்தம், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

வெந்நீர்: உணவு உண்டதும் பருகினால் செரிமானம் ஏற்படும். சீதக்கட்டு விலகும். ஆற வைத்துப் பருகினால் மிக நல்லது. அதனால் மார்புச்சளி, காது வலி, கண் வலி, சீழ் பிடிப்பு, வாந்தி மயக்கம், விக்கல் நாவறட்சி தீரும். பதமாகச் சுட வைத்த நீர், குளிர் நடுக்கம், வயிற்றோட்டம், அதிகக் காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.