Saturday, December 1, 2012

பொது அதிகார ஆவணப் பதிவு 01-12-2012 முதல் கட்டாயமாகிறது !





பொது அதிகார ஆவணம் ("பவர் ஆப் அட்டார்னி'), விற்பனை உடன்படிக்கை ("சேல் அக்ரிமெண்ட்') மற்றும் உரிமை ஆவண ஒப்படைப்பு உடன்படிக்கை ("டெபாசிட் ஆப் டைட்டில் டீட் தொடர்பான அக்ரிமெண்ட்') ஆகியவற்றைப் பதிவு செய்வது சனிக்கிழமை (டிசம்பர் 1) முதல் கட்டாயமாக்கப்படுகிறது.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி: பொது அதிகார ஆவணம், விற்பனை உடன்படிக்கை மற்றும் உரிமை ஆவண ஒப்படைப்பு உடன்படிக்கை ஆகியவற்றைத் தேவைப்பட்டால் பதிவு செய்து கொள்ளலாம் என சட்டம் உள்ளது. இத்தகைய ஆவணங்களை பெரும்பாலானோர் பதிவு செய்யாததால் நில அபகரிப்பு மற்றும் போலியான ஆவணப் பதிவு நடைபெறுகிறது.

இதைத் தடுக்கும் பொருட்டு பதிவுச் சட்டம் 1908-ல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தமிழ்நாடு சட்டம் 29/2012 இயற்றப்பட்டுள்ளது. சட்டத் திருத்தத்தின்படி பொது அதிகார ஆவணம், விற்பனை உடன்படிக்கை, உரிமை ஆவண ஒப்படைப்பு உடன்படிக்கை மற்றும் கட்டுமான உடன்படிக்கை ஆகியவை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

பொது அதிகார ஆவணத்தினைப் பதிவு செய்யும் போது அதிகாரம் பெற்றவராக நியமிக்கப்படும் முகவர் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் புகைப்படங்களை ஆவணத்தில் ஒட்டுவது கட்டாயமாக்கப்பட்டுவதுடன், முகவரும் ஆவணத்தில் கையொப்பமிட வேண்டும். இந்த நடைமுறை சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.                                                                                                       
நன்றி :-   தினமணி, 01-12-2012                                                                                          



0 comments:

Post a Comment

Kindly post a comment.