இலண்டனில் பிரிட்டிஷ் பெண் உளவாளியின் வெண்கலச் சிலை திறப்பு !
பிரிட்டனின் பெண் உளவாளியாகச் செயல்பட்ட நூர் இனாயத் கானின் தியாகத்தை வெளிப்படுத்தும் வகையில் அவரது வெண்கலச் சிலை லண்டனில் திறக்கப்பட்டது.
நூர் இனாயத் கான் இந் திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் இரண்டாம்
உலகப் போரின் போது, பிரான் சில் தங்கிப் பிரிட்டனுக்காக உளவு பார்த்து வந்தார். அங்கு பிரிட்டனின் உளவுக் கட்டமைப்புச் சிதைந்த போது, அவரை நாடுதிரும்ப அதிகாரிகள் உத்தரவிட்ட னர்.
ஆனால், அவர் தனி ஆளாக உளவு வேலையைப் பார்த்து வந்தார். பிறகு, ஜெர்மன் உளவாளிகளிடம் அவர் பிடிபட்டார். அவரை ஜெர்மனிப் படையினர் 10 மாதங்கள் வரை கடும் சித்ரவதைக்கு ஆளாக்கியும், அவ ரிடமிருந்து உண்மையை வரவைக்க முடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த ஜெர்மனி படையினர் 1944ம் ஆண்டு நூரின் 30வது வயதில் அவரை சுட்டுக் கொன்றனர்.
பிரிட்டனுக்காகப் பல கஷ்டங்களை அனுபவித்தும், உளவு பார்த்தும் பல சேவைகளைச் செய்த நூரின் தியாகத்தைக் கௌரவிக்கும் வகை யில் பிரிட்டனின் உயரிய விருதான “ஜார்ஜ் கிராஸ்” விருது வழங்கப்பட்டது.
தற்போது அவரை மேலும் கௌரவிக்கும் வகையில் அவரது மார்பளவு
வெண்கலச் சிலை லண்டனில் திறக்கப்பட்டுள்ளது.
இச் சிலையை, ராணி இரண் டாம் எலிசபெத்தின் மகள் இளவரசி ஆனி திறந்து வைத் தார். நூரின் பெயரில் அறக்கட்டளை ஒன்றும் துவக் கப்பட்டுள்ளது. இதன் தலைவரான சரபாணி பாஸி, நூரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார்.
நூர் இனாயத் கான், திப்பு சுல்தானின் கொள் ளுப் பேரன் இனாயத் கானின் மகளாவார். சிறுவயதி லேயே அவர் பிரிட்டன் சென்றுவிட்டார். அங்குள்ள கார்டோன் சதுக்கத் தில் வாழ்ந்து வந்தார். இந்த இடத்திற்கு அருகில் அவ ரது வெண்கலச் சிலை திறக்கப்பட்டுள்ளது.
நன்றி:-தீக்கதிர், 10-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.