Saturday, November 10, 2012

கிறிஸ்துவர்களின் எதிர்ப்பின் காரணமாக வைரமுத்துவின் பாடல் வரிகள் நீக்கம் !







எழுத்தாளர் ஜெயமோஹன் கதையில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் "நீர் பறவை”. இந்தப் படத்தின் சான்றிதழ் தொடர்பாக ஏற்கெனவே சர்ச்சை நிலவி வரும் சூழ்நிலையில், இந்தப் படத்தில் வைரமுத்து எழுதியிருக்கும் ஒரு பாடல் கிறிஸ்துவர்களின் எதிர்ப்பால் மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர் முழுதும் சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளனர்.

ஒரு பாடலில் "என்னுயிரை அர்ப்பணம் செய்தேன். உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன். சத்தியமும் ஜீவனுமாய் நீயே நிலைக்கிறாய்'' என்று எழுதியிருக்கிறார் வைரமுத்து.

இது கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளில் இடம் பெற்றுள்ள வசனம். இந்த வசனத்தை சினிமாப் பாடலில் பயன்படுத்தியதற்கு கிறித்துவ அமைப்பைச் சேர்ந்த சிலர் கவிஞர் வைரமுத்துவிற்க்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் வைரமுத்துவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


இந்தப் பிரச்னைக்கு விளக்கமளித்த வைரமுத்து, "யாருடைய மனதையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அந்தப் பாடலை எழுதினேன்.

கிறித்துவ மதத்தை மேம்படுத்தும் விதமாய் அந்த வார்த்தைகளை பாடலில் பயன்படுத்தியிருக்கிறேனே தவிர கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதவில்லை" என்றார்.


சீதையும் பாஞ்சாலியும் சிரித்ததால் இராமாயணமும் பாரதமும் வந்தது என்று அவலச்சுவை பாடிய வைரமுத்து, கிறிஸ்துவர்களின் எதிர்ப்பின் காரணமாக அந்தப் பாடல் வரிகளை நீக்கச் சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. ஏற்கெனவே வெளியான பாடல் கேசட் தவிர, படத்தில் அந்த வரிகள் நீக்கப்பட்டுள்ளன.

நன்றி :-தினமணி, 10-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.