நம் வலைப்பதிவர்களில் இணைய இதழ் நடத்துவோருக்கு மட்டும் பண வசதி இருந்துவிட்டால்.........................................?
தமிழகத்தின் தென்பகுதி மக்களை, கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் ஆளும் ராணியின் பெயர், தைரிய நாச்சியாள். அவருக்குப் பக்கபலமாக இருக்கும் குறுநில மன்னர் சூரிய நந்தன். அவருடைய ஒரே தங்கை வடிவுடையழகி. பொங்கல் விழாவில் வலுவான காளையை அடக்குகின்றார், கோச்சடையான். அவர் மீது வடிவுக்குக் காதல் பிறக்கிறது. அரச குடும்பத்தில் பிறந்தாலும் அடக்கத்தோடு நடந்து கொள்ளும் வடிவு மீது கோச்சடையானுக்கும் காதல்.
தைரிய நாச்சியாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கின்றார். அவ்வேளையில், சூரிய நந்தனை வஞ்சககமாக வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து விடுகின்றார், மூத்த அமைச்சர், கரிச்சடையான். அவருக்கு உதவியாய் இருந்தவர் பேய்க் காச்சடையான். இந்தச் சமயத்தில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்குள் வரத்துவங்குகின்றனர். பேய்க் காச்சடையான் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து மக்களை வாட்டி வதைக்கிறார். இன்னொருபுறம் பிரிட்டிஷ் இளவரசியும் கோச்சடையானைக் காதலிக்கின்றார். அதனை கோச்சடையான் ஏற்றுக் கொள்ளவில்லை.
காதலியின் அண்ணனை மீட்கவும், மக்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கவும் கோச்சடையான் விசுவரூபம் எடுக்கின்றார். ஹதராபாத் நிஜாம் அலாவுதீனின் ஆதரவும் கோச்சடையானுக்குக் கிடைகின்றது. வெற்றியை நெருங்கும்போதுதான் ’ அலாவுதீன் ஒரு கருப்பு ஆடு’ என்பது வெலிப்படுகின்றது. அத்தனை சூழ்ச்சிகளையும் முறியடித்து வெற்றிவாகை சூடுகின்றார், கோச்சடையன்.
அனைத்து மக்களும் கோச்சடையானை சக்கரவர்த்தியாக்கிட விரும்புகின்றனர்.
அப்பொழுது ரஜனி எடுக்கும் முடிவுதான் படத்தின் கிளைமாக்ஸ். என்று எழுதியபின், பக்கம் 50-ஐத் திருப்பச் சொல்கின்றது அஞ்சே ரூபா விகடன் டைம் பாஸ் 24-11- 2012 வார இதழ்.
கண்ணா, கோச்சடையான் கதன்னு யார் எது சொன்னாலும் நம்பிடறதா ? கோச்சடையான் கதை இதுதான்னு இவங்க உட்டாலக்கடி ரீல் விடற மாதிரி யார் விட்டாலும் நம்பிடாதீங்க.
ஹா..ஹா..ஹா..!
நன்றி:- விகடன் டைம் பாஸ், 24-11-2012
Friday, November 16, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.