Saturday, November 17, 2012

பால்தாக்கரே.. கார்ட்டூனிஸ்ட் முதல் காலம்னிஸ்ட் !


மும்பை: மும்பையில் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே, மகாராஷ்டிரா மாநில மக்களின் உரிமைகளுக்கான குரல் கொடுத்ததுடன் கடந்த அரை நூற்றாண்டுக் கால மகராஷ்டிரா அரசியலில் அசைக்க முடியாத தீர்மானிக்கும் சக்தியாகவும் திகழ்ந்தவர்.

மகாராஷ்டிராவின் பூனேவில் 1926-ம் ஆண்டு பிறந்த பால்தாக்கரே கார்ட்டூனிஸ்டாக மும்பையில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1966களில் மராட்டிய இனத்துக்கான சிவசேனா கட்சியைத் தொடங்கினார்.

மகாராஷ்டிர மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்தை முன்வைத்தவர் அவர். மகராஷ்டிராவில் செல்வாக்கு மிக்க அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்சியாக சிவசேனாவை உருவாக்கியவர் பால்தாக்கரே. தமது கட்சிக்காக சாம்னா என்ற பத்திரிகையை உருவாக்கினார்.

1995-ம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்து மகராஷ்டிராவில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பால்தாக்கரே எந்த ஒரு பொறுப்பையும் ஏற்கவில்லை.

பொதுவாக எந்த ஒரு ஊடகத்துக்கும் பேட்டி கொடுக்காத பால்தாக்கரே, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ ஏடான சாம்னாவில் மட்டுமே கருத்துகளை எழுதி வந்தார். அதுவே அவரது கட்சியினருக்கான கட்டளையாகவும் இருந்தது.

கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் தொடங்கி சாம்னாவின் ஆசிரியராக, காலம்னிஸ்டாக வாழ்க்கையை நிறைவு செய்தவர் பால்தக்கரே. பால்தாக்கரேவின் மகன் உத்தவ்தாக்கரேதான் அரசியல் வாரிசாக சிவசேனாவை நடத்தி வருகிறார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை நடத்தவிடமாட்டேன் என்பதுதான் பால்தாக்கரேயின் இறுதிப் போராட்ட அறிவிப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.                                                                         

நன்றி :- ஒன் இந்தியா, 17-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.