பிரிட்டன் தமிழர் பேரவையின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா எம்.பி., தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் திங்கள்கிழமை (நவம்பர் 5) லண்டன் செல்கின்றனர்.
ஈழத் தமிழர் படுகொலைகளை, ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) வழிகாட்டுதலில் தனி அதிகாரம் கொண்ட சர்வதேச குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பிரிட்டானியத் தமிழர் பேரவையின் சார்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சிறப்பு மாநாடு நவம்பர் 7 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நன்றி :- தினமணி, 05-11-2012
Monday, November 5, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.