Friday, November 9, 2012

பல் மருத்துவர்களிடம் செல்லாதிருக்க ஓர் வழி !


வெள்ளையர் நம்மை ஆட்சி செய்ததால் வந்த பெருந்தீங்கு, நமது தாய் மருத்துவம் என்று சொல்லக்கூடிய சித்த மருத்துவத்தின் மேல் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்தது.

தடுப்பூசி என்று நம் குழந்தைகளுக்குப் போடும் மருந்தே, அம்மை நோய்க் கிருமிகளை உடம்பிற்குள் ஏற்றுவதுதான்.

ஆரோக்கியமான பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்து, போதிய எடையும்,நல்ல சுத்தமான ரத்தத்தின் அளவும் சரியாக இருந்தால் எந்த நோயும் நம்மை அணுகாது. அப்படியே அணுகினாலும், உடலின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து, நோய் தாக்கிய பகுதிக்கு வந்து attack செய்து நச்சுக் கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்றிவிடும்.

பல் துலக்க ப்ரஷையும், பேஸ்டையும் எப்பொழுது கையிலெடுத்தோமோ அப்பொழுதே பற்களின் நலனுக்கு வேட்டு வைத்து விட்டோம் என்றுதான் பொருள். அதிலும் ஹார்டு, மீடியம், சாஃப்ட் என்று மூன்று வகை. ஹார்டு பிரஷைப் பயன்படுத்தினால் பற்கள் நன்கு சுத்தமாகும் என்ற எண்ணம் வேறு !

விளம்பரப் படங்களில் காட்டப்படும் அளவு பேஸ்டை வைத்துப் பல்லைத் துவக்கினால், அந்த பேஸ்டின் அளவு மூன்று நாட்களுக்குக் கூட வராது.

மேலும், வந்த கதை, போன கதை, வரப் போகும் கதை என்று பேஸ்டும் பிரஷுமாக நீண்ட நேரம்  பேசிக்கொண்டே பல் துலக்குவதும் கூடாது. எடுத்தோமோ கீழும் மேலுமாக ஒன்றிரண்டு இழுப்புக்கள், சைடில் இரண்டு  இழுப்புக்கள்  இழுத்தோமா என்று சில நொடிகளில்  முடித்துக்கொண்டாலே போதுமானது.

பிரஷ்ஸில் பேஸ்ட் வைத்தவுடன் அதில் இரண்டு சொட்டு நீர் விட்டு நனைத்துக் கொண்டபின், பல் துலக்க ஆரம்பிப்பது நல்லது.

மேலும் குறைந்த கொள்ளவு  கொண்ட சிறு சிறு பேஸ்டுகளில் அளவு/ எடை சரியாக இருக்கும். பெரியனவற்றைச் சிறியனவற்றோடு ஒப்பிட்டுக் கணக்கிட்டுப் பார்த்தால்தான் இந்த உண்மை தெரியவரும்.

அதிலும் சாஃப்ட் பிரஷ் ரொம்பவும் நல்லது. மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் என்று உணர்ந்து கொண்ட பெரு வியாபாரிகள் தற்சமயம் சோபஸ்டிகேடட் சாஃப்ட் என்ற ஃப்ரஷை விற்பனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மெடிகேடெட் பேஸ்டுகளும் பலவகைகள் வந்துவிட்டன.

எந்த பல் டாக்டரிடம் போகின்றோமோ அதற்குத் தகுந்தார்போல் கம்பெனிப் பொருட்கள் மாறும். அவ்வளவுதான்.

அதற்காக, ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சொல்லி, ஆலங் குச்சியையும், வேலங்குச்சியையும் தேடிப் போகச் சொல்லவில்லை. சென்றாலும் நல்லதுதான்.

சித்தா, ஆயுர்வேதா கடைகளில் நல்ல பற்பொடிகள் கிடைக்கின்றன. அவற்றுள் மனதுக்குப் பிடித்த ஒன்றை வாங்கி, இயற்கை தந்த விரல்களையே பிரஷ்சாகப் பயன்படுத்துவோமானால், பல் டாக்டர்களிடம் முதுமைக்காலங்களில், இயற்கையாக ஏதேனும் குறை ஏற்பட்டால் சென்றால் போதும் ! இன்னும் சொல்லப் போனால் அதற்குக் கூட அவசியம் ஏற்படாது. 



0 comments:

Post a Comment

Kindly post a comment.