Saturday, November 17, 2012

இந்திய அமெரிக்கப் பேராசிரியர் மீது பல லட்சம் டாலர் மோசடிப் புகார் !


தேசிய அறிவியல் கழகத்தின் பல கோடி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக மார்கன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் இந்தியஅமெரிக்கப் பேராசிரியர் மனோஜ் குமார் ஜா என்பவரை அந்தநாட்டு கோர்ட் குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.

46 வயதான ஜா, பல்கலைக்கழகத்தின் போக்குவரத்துப் பொறியியல் பட்டதாரி திட்டத்தை மேற்பார்வையிட்டு வரும் பொறுப்பில் இருந்தவர். இந்தத் திட்டத்தின் கீழ், தான் நிறுவிய மார்கன் மாகாண அட்வான்ஸ்ட் டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் அடிப்படைப் பொறியியல் ஆய்வுக் கழகம் என்ற தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒரு ஆய்வறிக்கைத் திட்டத்தை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். பின்னர் இந்த ஆய்வறிக்கையை ஏற்று தனது நிறுவனத்திற்கு நிதியுதவியை அனுமதித்துள்ளார்.

ஆய்வக்காக 2 லட்சம் டாலர் பணத்தை இவர் தனது நிறுவனத்திற்கு அளித்துள்ளார். ஆனால் இதைத் தனது சுய லாபத்துக்குப் பயன்படுத்தியுள்ளார்.

அதேபோல தனது மனைவி பெயரில் 11,000 டாலர் நிதியை ஒதுக்கியுள்ளார். ஆனால் இவரது மனைவி எந்தப் பணியையும் செய்யவில்லை.

அதேபோல இவரே ஆய்வறிக்கையை எழுதி, அதற்காகவும் 6000 டாலர் பணத்தை முறைகேடாக ஒதுக்கி மோசடி செய்துள்ளார்.

மேலும் தனது நிறுவனம் மூலம் 5 லட்சம் டாலர் நிதியுதவி கோரியும் விண்ணப்பித்திருந்தார்.இருப்பினும் இந்த நிதி ஒதுக்கீடு நடைபெறவில்லை.

கடந்த 2008 ஜனவரி முதல் 2009 ஜூலை வரையிலான காலக்கட்டத்தில் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன.

மேலும் தனது திட்டத்திற்காக மார்கன் மாகாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியரை அறிவியல் ஆலோசகராகவும் இவர்காட்டியுள்லார்.

அதன் மூலம் 1 லட்சம் டாலர் பணத்தையும் இவர் பெற்றுள்ளார். இந்த மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அதில் ஜா குற்றவாளி என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

1967ம் ஆண்டு இந்தியாவில் பிறந்தவர் ஜா. அங்கு பி.இ முடித்த அவர் 1981ம் ஆண்டு அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார்.

பின்னர் பழைய டொமினியன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மெக்கானிக்கல் என்ஜீனியரிங் பட்டம் பெற்றார்.

1997ல் தொழில்முறை பொறியாளராக தன்னைப் பதிவு செய்து கொண்டார். 2000மாவது ஆண்டு மேரிலான்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்.

 இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர் .                                                              

நன்றி :-ஒன் இந்தியா, 17-11-2012









0 comments:

Post a Comment

Kindly post a comment.