சென்னை மயிலாப்பூர் கடற்கரை, திருவள்ளுவர் நின்று நடமாடிய கடற்கரை, அந்தக் கடற்கரைக்குத் தமிழ்நாட்டின் பெயரோ, திருவள்ளூவரின் பெயயரோ, தமிழையோ, தமிழகத்தையோ நினைவு படுத்தக் கூடிய எந்தப் பெயரையுமே வைக்காமல் வங்காள விரிகுடா என்று பெயர் வைக்க எப்படித் தோன்றியது ?
வங்காள விரிகுடா என்று பெயர் வைத்து, கிழக்குக் கடற்கரையோர மக்களைச் சொல்ல வைத்தவர்கள், தமிழ் விரிகுடா என்று வைத்து , கிழக்குக் கடற்கரையோர மக்களைச் சொல்ல வைத்திருக்கலாமே ? ஏன் அவ்வாறு செய்யவில்லை ?
பழைய தமிழகமான , சேரநாட்டை ஒட்டிய கடலைக் குட கடல் என்று முன்னோர் அழைத்தனர். அக்கடலுக்கு 1500 மைல்களுக்கு அப்பால் உள்ள மொழியாலோ, மதத்தாலோ, பண்பாட்டாலோ எந்தவிதத் தொடர்புமில்லாத ‘அரேபியன் சீ’ என்று பெயர் வைக்க எப்படித் தோன்றியது ? இளங்கோ அடிகளின் பெயரையோ, சிலப்பதிகாரப் பெயரையோ, சேரன் செங்குட்டுவன் பெயரையோ, அக்கடலுக்குச் சூட்டியிருக்க வேண்டாமோ ?
தெற்கே வருவோம்.தமிழ் நாட்டின் தெற்குக்கோடியைத் தமிழ்க் கோடி என்று அழைப்பதுதானே சரியாக இருக்கும் ? அதற்கு எப்படி தனுஷ்கோடி என்று பெயர் வைத்தனர் ? அந்த முனையில் தமிழ் ஈஸ்வரம் என்ற பெயரைச் சூட்டி இருப்பதே நியாமானதாகும். ஆனால் இராமேஸ்வரம் என்று எப்படிப் பெயர் சூட்டினர் ?
தென் முனையின் இக்கரையிலும், அக்கரையிலும் வாழ்பவர்கள் தமிழர்கள். இடப்பட்டது சமுத்திரம்.
அந்தச் சமுத்திரத்திற்குத் தமிழ் மகா சமுத்திரம் என்று பெயர் வைக்காமல், இந்து மகா சமுத்திரம் என்று எப்படி பெயர் வைக்க முடிந்தது ?
இங்கிலாந்தையும், பிரான்ஸையும் பிரிக்கும் கால்வாய்க்கு இங்கிலீஸ்க் கால்வாய் என்றே பெயர்.
வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் ”பனாமா” என்ற பகுதி பிரிக்கிறது. பிரிக்கும் அந்தக் கடல் பகுதிக்கு பனாமா கால்வாய் என்று பெயர்.
சீனாவை ஒட்டிய கடலுக்குச் சீனக் கடல் என்றே பெயர்.
பேராசிரியர். க.அப.அறவாணன் சிந்தனைகள். தினமலர், 04-08-2012
Wednesday, November 14, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.