Friday, November 16, 2012

மரைன் எஞ்சினியரின் பணம் மலேசியாவில் போலி ஏடிம் கார்டு மூலம் திருட்டு ! வட்டியுடன் திருப்பிக் கொடுக்க வங்கிக்கு நுகர்வோர் கூட்டமைப்பு உத்தரவு !


கடலூரைச் சேர்ந்தவர் ரஜினிகாந்த். மரைன் என்ஜினீயரான இவர் கடந்த 2009-ம் ஆண்டில் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ஸ்டேட் பேங்கில் வங்கிக் கணக்கு வைத்திருந்த அவர், அங்கிருந்தபடியே இண்டர்நெட் மூலமாக தனது வங்கிக் கணக்கை ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.2.82 லட்சம் பணம் மாயமாகி இருந்தது. இந்தப் பணம் மலேசியாவில் இருந்து போலி ஏ.டி.எம். கார்டு மூலம் திருடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரஜினிகாந்த் உடனடியாக ஊருக்குத் திரும்பி கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள வங்கிக் கிளையில் முறையிட்டார். இதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து புதுவையில் எஸ்.பி.ஐ. வங்கியின் மண்டல மேலாளரிடம் ரஜினிகாந்த் முறையிட்டார்.

வங்கியில் இருந்து கடலூர் மாவட்ட குற்றப் பிரிவுப் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதற்கிடையே தமிழக நுகர்வோர் கூட்டமைப்பில் ரஜினிகாந்த் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த நுகர்வோர் கூட் டமைப்பு மலேசியாவில் மர்ம நபர்களால் திருடப்பட்ட ரூ.2.82 லட்சம் பணத்தை 6 சதவீத வட்டி மற்றும் வழக்குச் செலவு தொகை ரூ.2 ஆயிரம் ஆகியவற்றுடன் ரஜினிகாந்துக்குத் திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது.

மேலும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தபடி போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலமாக பணம் திருடப்படுவதை தடுக்க ஏ.டி.எம். மையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்த வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளைப் போலீசார் கண்டு பிடிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.