மகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் செயல்- காந்தியின் உதவியாளர், வி. கல்யாணம் .. , கருத்து !
தேசத் தந்தை பட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்து மகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் காந்தியிடம் உதவியாளராகப் பணியாற்றிய வி.கல்யாணம் கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தின்படி, தேசத் தந்தை என்ற பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பட்டமாக பயன்படுத்த முடியாது என்று லக்னெüவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு அளித்த பதிலில் உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காந்தியிடம் உதவியாளராக இருந்த வி.கல்யாணம், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு புதன்கிழமை எழுதிய கடித விவரம்:
"தேசத் தந்தை' என்ற பட்டம் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் பதில் மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும் வகையில் உள்ளது.
பத்ம விருதுகளை பெயருக்கு முன்னாள் பயன்படுத்துவது குறித்தும், அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் பட்டங்கள் குறித்தும் அரசு
தேசத் தந்தை பட்டம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள கருத்து மகாத்மா காந்தியின் நினைவை அவமதிக்கும் வகையில் உள்ளதாக காந்தியிடம் உதவியாளராகப் பணியாற்றிய வி.கல்யாணம் கூறியுள்ளார்.
அரசியல் சட்டத்தின்படி, தேசத் தந்தை என்ற பட்டத்தை அங்கீகரிக்கப்பட்ட பட்டமாக பயன்படுத்த முடியாது என்று லக்னெüவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு அளித்த பதிலில் உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காந்தியிடம் உதவியாளராக இருந்த வி.கல்யாணம், இது தொடர்பாக உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவுக்கு புதன்கிழமை எழுதிய கடித விவரம்:
"தேசத் தந்தை' என்ற பட்டம் தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் பதில் மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கும் வகையில் உள்ளது.
பத்ம விருதுகளை பெயருக்கு முன்னாள் பயன்படுத்துவது குறித்தும், அரசியல் தலைவர்கள் பயன்படுத்தும் பட்டங்கள் குறித்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.
"தேசத் தந்தை' என்ற பட்டம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸால் காந்திஜிக்கு 1944-ல் வழங்கப்பட்டது. கஸ்தூர்பா காந்தி இறந்தபோது, அவருக்கான அஞ்சலிச் செய்தியில் காந்திஜியை தேசத் தந்தை என்று நேதாஜி அழைத்திருந்தார். ( இட்லரிடம் பேசும்பொழுதே காந்தியைத் தேசப்பிதா என்று நேதாஜி குறிப்பிட்டுள்ளார் )
அவர்களுக்குக் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவரை ஒருவர் உளமார நேசித்தனர். ரங்கூனிலிருந்து வானொலியில் உரையாற்றும்போதுகூட காந்திஜியை தேசத் தந்தை என்றுதான் நேதாஜி அழைத்தார்.
காந்திஜி கொலை செய்யப்பட்ட அன்று வானொலியில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேருவும்கூட "பாபு என்று நாம் அழைக்கும் நமது பாசமிகு தலைவர், "தேசத் தந்தை' நம்மிடமிருந்து மறைந்துவிட்டார்' என்றுதான் குறிப்பிட்டார்.
சட்டத்தைவிட மரபு மேலானது அல்லதான். ஆனால், மரபுகள் சட்டத்துக்குச் சமமானவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.
மகாத்மா காந்தியின் பல ஆண்டுத் தியாகம், உழைப்பின் காரணமாகவே இந்திய அரசியலமைப்புச் சட்டமும், சுதந்திரமும் கிடைத்தது. எனவே, அந்தப் பட்டத்தை அரசியல் சட்டம் அங்கீகரிக்கவில்லை என்பது சிறுபிள்ளைத்தனமானது. இது மகாத்மாவின் நினைவை அவமதிக்கும் வகையில் உள்ளது.
மிகப்பெரிய தேசத் தலைவர்களும், சாதாரண மக்களும் காந்தி அடிகளுக்கு வழங்கி அங்கீகரித்த அந்த கௌரவத்துக்கு சட்டத்துக்கு இணையான கௌரவம் உள்ளது. இந்த நிலையில், உள்துறை அமைச்சகத்தின் பதில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பிரச்னையில் நீங்கள் தலையிட்டு, "தேசத் தந்தை' என அழைப்பது அரசுக்கு ஏற்புடையது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார் வி.கல்யாணம்.
நன்றி :- தினமணி, 03-11-2012.
1.எல்லாப் பத்திரிக்கைகளிலும் வந்துள்ள இந்தச் செய்தி அதிர்ச்சியையும் வியப்பையும் தருகின்றது. சட்டம் இடங்கொடுக்கவில்லை என்றால் சட்டத்தை மாற்றிட எவ்வளவு நேரம் ஆகும் ? இந்தச் சட்டத்தை எதிர்ப்பார் எவருளர் இந்தியப் பாராளுமன்றத்தில் ?
2.முதன் முதலில் இன்ஸூரன்ஸ் கம்பெனிப் பணத்தினைத் தகாதமுறையில் பயன்படுத்திய காரணத்திற்காக, மாமனார் பிரதமராக இருந்தபோது அஞ்சாமல் பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தி, பயன்படுத்தியவரை ஜெயிலுக்கும், துணைநின்ற நிதி அமைச்சரை வீட்டுக்கும் அனுப்பு வைத்தவர், இந்திராஜியின் கணவர், ஃப்ரோஸ் காந்தி ! இதன் மூலம்தான் இன்ஸூரன்ஸ் கம்பெனிகள் தேசிய மயமாயின. மேலும் முதன் முறையாகப் பத்திரிக்கையாளர்களுக்குப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரவும் காரணியாகவும் அமைந்தது, இந்த முந்திரி ஊழல் !
அவரும் காங்கிரஸ்காரர்தானே? இந்திராஜியின் கணவர்தானே ? அவரது நூற்றாண்டு விழா இந்தஆண்டு செப்டம்பரில் ஏன் கொண்டாடப் படவில்லை ? அதற்கான அறிகுறியையும் காணவில்லையே . ஏன்?
3. கட்சிக்காரர்கள்தான் கைவிட்டு விட்டனர். பத்திரிக்கையாளர்களும் கைவிட்டது ஏன் ? பத்திரிக்கை நிரூபர்கள் சங்கத் தலைவர் டி.எஸ்.இரவீந்திரதாஸ் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா ?
4. கணவர் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரிக்கையாளர் சட்டம், அவரது மனைவி இந்திராஜியாலேயே பிற்காலத்தில் வாபஸ் பெறப்பட்டது.
5. பின்னர் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது.
இவை எல்லாமே நடந்த உண்மைகளை நினைவூட்டுவதற்காகவே !
http://rssairam.blogspot.in/2012/10/blog-post_5826.html
பெரோஸ் காந்தி முதல் வதேரா வரை...-இரா.செழியன்
அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை.
காந்திக்கே இந்தக் கதி என்றால், பெரொஸ் காந்தியை யார் நினைவு கூர்வர் ?
0 comments:
Post a Comment
Kindly post a comment.