Monday, November 5, 2012

படத்தில் உள்ளது சீனத்துப் பெண் ! சொல்லப்போவது சென்னையில் நடந்த உண்மைக்கதை !





சென்னையில், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்குக் கடற்கரைச் சாலை,  டைடல் பார்க்  என்ற பெருகி வந்த I T   அலுவலகங்கள்  தற்பொழுது தொழிற்பேட்டைகளையும் விட்டு வைக்கவில்லை. படிக்காத மேதை காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில், தொழில் துறை அமைச்சராகத் தமிழகத்தில் இருந்தவர், ஆர்.வெங்கட்ராமன். பிற்காலத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் ஆகத் திகழ்ந்தவரான அதே ஆர்.வி. தான்.

அப்பொழுது ஏற்படுத்தப்பட்ட தொழிற்பேட்டைகளுள் ஒன்றுதான், AMBATHUR INDUSTRLIAL ESTATE சிறு தொழில்கள் வளர்ச்சிக்காகக் குறைந்த விலைக்கோ அல்லது நீண்டகாலக் குத்தகைக்கோ வழங்கப்பட்ட நிலப்பகுதிகள், இன்று காணாமற் போய்க் கொண்டிருக்கின்றன.

பெரிய பெரிய கட்டிடங்கள்  கட்டப்பட்டு  I T அலுவலங்களாக உருமாறி வருகின்றன.  மேற்படி சாலைகளுக்கும், அப்பகுதிகளுக்கும்  இரவில் சென்று விட்டால், ஒளிரும் வண்ணமயமான மின் விளக்குகளும், அவற்றில்  பிரதிபலிக்கும் கட்டிடங்களும் நாம் இருப்பது சென்னையிலா அல்லது வெளிநாட்டிலா என்ற ”திக்பிரமையை” த்தான்  ( பழைய எழுத்தாளர்கள் பயன்படுத்திய வார்த்தை இது ) ஏற்படுத்துகின்றன.

சென்னை அண்ணா சாலையில், ஸ்பென்ஸர் பிளாஸாவிற்கு எதிர்ப்புறத்தில் இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இயங்கிய அலுவலகங்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு வந்து விட்டன.

பிரம்மாண்டமான  கட்டிடங்களில் இயங்கும் I T  அலுவலகங்களில் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சம்பளம் கொடுக்கப்படுகின்றதா என்றால், அதுவும் இல்லை. எங்கு சம்பளம் அதிகம் கொடுக்கப்படுகிறதோ அங்கு தாவிக் கொண்டே இருக்கின்றார்கள், கணினிப் பொறியாளர்கள். கிடைத்தது போதும் என்று திருப்தி அடைந்து அடங்கிப்போய்விடுவோரும் உண்டு.


முன்பெல்லாம்  தொழிற்சாலை வாயில்களில் நின்று வேடிக்கை பார்த்தால், உள்ளே வேலைக்குப் போகும், திரும்பி வரும் ஊழியர்களின் உடம்பு முழுவதையும் தடவிப் பார்த்த பின்பும், உணவுப் பாத்திரங்களைத் திறந்து பார்த்தபின்புமே அனுமதிக்கப்படும் காட்சிகளைக் கண்டு வருந்த நேரும். எந்தத் தொழிற்சங்கமும் இதற்கு எதிராகக் குரலெழுப்பியதாக நினைவில் இல்லை. இத்தகைய செயல்கள் நடைமுறைப்பழக்கமாகிவிட்டன

இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குப் புதிய I.T. நிறுவனங்கள் என்ன செய்கின்றன ? விசாரித்தபோது ஒரு கம்பெனியில் கிடைத்த தகவல் ! உள்ளே நுழையும்பொழுது, அடையாள அட்டையைத் தேய்த்தபின், இரண்டு சிறு பந்துகள்  இரு வேறு வண்ணங்களில் வைக்கப்பட்டிருக்குமாம். அவற்றில் ஏதேனும் ஒரு பந்தை எடுக்க வேண்டுமாம். அன்று நிர்வாகம் தீர்மானித்துள்ளபடியான வண்ணப் பந்தை எடுத்தவர்கள் முற்றிலுமாகச் சோதனைக்குட்படுத்திய பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுவார்களாம்.இரு பாலருக்கும் இது பொதுவே. கார் என்றால் வெ4டி குண்டுப் பரிசோதனை நிச்சயம் உண்டு.

அண்மையில் ஒரு நிறுவனத்தில், ஒரு பெண்மணி, திடீரென்று என் பர்ஸைக் காணவில்லை; அலுவலகத்திற்குள்தான் தொலந்து போய் விட்டது. கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று சத்தியம் செய்திட, அலுவலகமே களேபரமானது. ( பழைய எழுத்தாளர்கள் பயன்படுத்திய வார்த்தை.)

 எந்த வகையிலும் அந்தப் பெண்மணியை யாராலும் சமாதானப்படுத்த இயலவில்லை. பார்த்தார், உயர் அதிகாரி. எல்லோரையும் பெரிய ஹாலுக்கு வரவழைத்தார். அலுவலகத்திற்குள் நுழைந்ததிலிருந்து, திரும்பும் வரை புகைப்பபடமெட்டிருக்கும் அனைவரது அனைத்துச் செயல்களையும் உள்ளடக்கியவற்றைத் திரைப்படமாகக் காட்டினார். எந்தப் பயனும் ஏற்படவில்லை.

அப்பொழுது அந்த அலுவலகத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பு பிரச்சினையத் தீர்த்து வைத்தது.  தொலந்து போன பர்ஸைப்பற்றியும், வந்து வாங்கிக் கொள்ள வேண்டிய இடத்தையும் பற்றிய தகவலைப் பற்றிய செய்தியையும் கூறியது.

புகார் கொடுத்த பெண்மணியின் முகத்தில் அசடு வழிந்ததைச் சொல்லவும் வேண்டுமோ ?


0 comments:

Post a Comment

Kindly post a comment.