சென்னை: நீலம் புயலைத் தொடர்ந்து வங்கக் கடலில் மீண்டும் ஒரு புயல்
சின்னம் உருவாகியிருக்கிறது.
கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியிருக்கும் இந்தக் காற்றழுத்தம்
தீவிரக் காற்றழுத்தமாக மாறியிருப்பதாக வானிலை ஆய்வு மையம்
அறிவித்திருக்கிறது.
சென்னைக்குக் கிழக்கே ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிலும் ஆந்திர
மாநிலம் விசாகப்பட்டினத்துக்குக் கிழக்கே 650 கிலோ மீட்டர் தொலைவிலும்
இப்புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது
புயலாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
இப்புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் முதலில் வடமேற்கிலும் பின்னர்
தென்மேற்கிலும் வடதமிழ்நாடு- தென் ஆந்திரா நோக்கி நகரும் என்று
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் அந்தமான் தீவுப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்குக் கனமழை
பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. வங்கக் கடலில் மீன்பிடிக்கும்
மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இப்புதிய புயலால் அனைத்து ஆந்திர மாநிலக் கடலோர துறைமுகங்களிலும்
ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது
நன்றிஒ:- ஒன் இந்தியா, 18-11-2012
Sunday, November 18, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.