Monday, November 12, 2012

முதன்முறையாக அமெரிக்காவில் இந்தியருக்கு மந்திரி பதவி: அதிபர் ஒபாமா முடிவு !


சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவர் வருகிற ஜனவரி மாதம் 2-வது முறையாக அதிபர் பதவி ஏற்கிறார்.  

எனவே, அவர் தற்போதுள்ள மந்திரி சபையை மாற்றி அமைக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜ் ஷா (39) என்பவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட உள்ளது. அவருக்குச் சுகாதரம் மற்றும் மனித சேவைத் துறை, விவசாயத் துறை அல்லது கல்வித்துறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ் ஷா தற்போது அமெரிக்காவுக்கான சர்வதேச வளர்ச்சிக் கவுன்சில் தலைவராக உள்ளார்.


கடந்த 3 1/2 ஆண்டுகளாக இவர் தனது சேவையைச் சிறப்பாகச் செய்து வருகிறார். எனவே, இவரை ஒபாமாவுக்கு மிகவும் பிடித்து அவருடன் மிகவும் நெருக்கமானார்.

ஆகவே, இவருக்கு மந்திரி பதவி வழங்க ஒபாமா முடிவு செய்துள்ளார். இதனால் இவர் மந்திரி ஆவது உறுதியாகி விட்டது. செனட் உறுப்பினர்களின் ஆதரவு தேவையில்லை.                                                                                                             
நன்றி :- மாலைமலர், 12-11-2012                            




0 comments:

Post a Comment

Kindly post a comment.