Sunday, November 18, 2012

எல்லோரும் எல்லாமும் பெற்ற, இல்லாமை இல்லாத கிராமம், ஸ்பெயின் நாட்டில் !















தீபாவளிக்கு 10ரூபாய்க்கு மூன்று புத்தகங்களைத் தந்தது வாராந்தரி ராணி.

 அதிசயம்  என்னும் தலைப்பில் உலகுக்கே வழிகாட்டும் உன்னத கிராமம்




என்ற கட்டுரையை 57-ஆம் பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றது. அனைவரும் படிக்க வேண்டியது அவசியம். எனவே, இந்தப் படங்களை
இணையத்தில் தேடி எடுத்து வலைப்பதிவர்களின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

 ஐரோப்ப்பிய நாடு ஸ்பெயின். மரினலேடா அங்குள்ளதோர் கிராமம். தெற்கு செவியா நகரத்திலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது. இக்கிராமத்தில் 2,700 பேர் வசிக்கின்றனர்.

வயல்கள், பண்ணைகள், தொழிற்சாலைகள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கின்றன. இங்கு வேலை இல்லாதவர்களே கிடையாது. ஊதியத்திலும் ஏற்றத் தாழ்வு இல்லை. அனைவருக்கும் சொந்தமாக வீடும் உண்டு. குற்றச் செயல்களே நடக்காது என்பதால் காவல் நிலையம்-நீதிமன்றம்கூட கிடையாது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 10,000 ஏக்கர் நிலம், ஒரே நபரிடம் இருந்தது. நிலமற்ற விவசாயிகள் அதை ஆக்கிரமித்தார்கள் அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது. நிலமற்றவர்களின் தலைவராக ஜுவான் சஞ்செஸ் கொர்டியே என்பவர் உருவான பிறகு நிலைமை மாறியது.

செவியா நகரின் விமான நிலையம், ரெயில் நிலையங்களை முற்றுகையிட்டு போக்குவரத்தை முடக்கினார்கள். அரசு அலுவலகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில், கொண்டு வந்தனர். 1991-ஆ ஆண்டு நிலங்களுக்கான உரிமைப் பத்திரத்தை, போராடிய மக்களிடமே அரசு வழங்கியது.

அதன்பிறகு கூட்டுறவுப் பண்ணைகளை அமைத்தார்க. வயல்கள், தோட்டங்கள், பண்ணைகளில் அனைவரும் சரிசமமாக உழைத்தார்கள்.விவசாய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து கிடைத்த லாபமும் மக்களிடையே திரும்ப வந்தது.உயர்தொழில்நுட்ப தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், விளையாட்டுத்திடல்கள், நீச்சல் குளங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு.

கத்தரி, தக்காளி, மிளகாய், கடுகு போன்றவைகளை வெவெவேறு இடங்களில் அறுவடை செய்யும் மாதங்கள் மாறுபடும். எனவே ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு இடத்தில் அறுவடை செய்யலாம். மக்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் ஒன்றுகூடி அறுவடை செய்கிறார்கள். வயல்களில் உற்பத்தியாகும் காய்கறிகள்-பழங்கள், மக்களின் தேவையைப் பூர்த்தி செகின்றன. தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை நாட்டின் மற்ற பகுதிகளில் விநியோகிக்கிறார்கள்.  

அகதிகளுக்கு வேலை !

அருகில் உள்ள கிராம மக்களையும் வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். ஏழை நாடுகளைச் சேர்ந்த  அகதிகளுக்குத் தொழில் வாய்ப்பும் கிடைக்கிறது. ஒருவர் சொந்த வீடு கட்ட விரும்பினால், நகரசபை அனைத்து உதவிகளையும் செய்கிறது. சிமெண்டு, மண், கல், மரம் எல்லாவற்றையும் வழங்குகின்றது. வீட்டையும் கட்டிக் கொடுக்கிறது. தவணை முறையில் பணத்தைத் திருப்பிச் செலுத்தினால் போதும். ஆனால், வீட்டை வேறு யாருக்கும் விற்க முடியாது. வேலை செய்யும் பெற்றோர், குழந்தைகளைப் பாதுகாக்க காப்பகத்துக்குக் குறைந்த தொகை செலுத்தினால் போதும். மருத்துவ வசதியும் இலவசம். பள்ளிக் கூடத்தில் இலவச மதிய உணவு கிடைக்கிறது. பாட நூல்களும் இலவசம்தான்.

உயர் கல்வி கற்க பிற நகரங்களுக்குத்தான் செல்ல வேண்டும். ஆனாலும், படிப்புச் செலவுகளை நகரசபை ஏற்றுக் கொள்ளும். நகரசபைக் கூட்டத்தில் மக்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். சாலை போடுவதிலிருந்து பள்ளிக்கூடம் கட்டுவதுவரை அனைத்துமே மக்கள் வாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்படுகிறது.

ஜுவான் மனுவேல் சஞ்செஸ், மேயராக இருக்கிறார். ஸ்பெயினின் பிற நகரங்களில் வசிக்கும் ஏழைகளை “சூப்பர் மார்க்கெட்டுக்களுக்கு” அழைத்துச் சென்று அங்கிருந்த பொருட்களைப் பகிர்ந்தளிக்கின்றார். அவரை இப்போது ”ராபின் ஹூட்” என்றுய் அழைக்கிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதால், அவரைக் கைது செய்ய முடியாமல் தவிக்கிறது காவல் துறை.



















Historical population of Marinaleda, Spain
Year 1999 2000 2001 2002 2003 2004 2005 2006 2008 2011
Population 2,623 2,634 2,638 2,647 2,645 2,676 2,655 2,689 2,708 2,778



0 comments:

Post a Comment

Kindly post a comment.