சீனாவில் தற்போது நிலக்கரி, கியாஸ் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை விட அணு உலை மூலம் மின்சாரம் தயாரிக்க குறைந்த செலவே ஆகும் என்பதால் அதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
வருகிற 2020–ம் ஆண்டில் 100 ஜிகாவாட் (ஒரு ஜிகாவாட் என்பது ஆயிரம் மில்லியன் வாட்ஸ் ஆகும்) மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தற்போது முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி விடும். இந்தத் தகவலைத் தனியார் மின் உற்பத்தித் திட்ட மேலாளர் ஸ்டீபன் வில்சன் தெரிவித்தார்.
மேலும் 2050–ம் ஆண்டிற்குள் அணு உலைகள் மூலம் 400 ஜிகாவாட் மின்சாரத்தைத் தயாரிக்கவும் சீன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.