Tuesday, November 13, 2012

கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் வசதி கேட்டுப் போராட்டத்தில் குதித்த மாணாக்கர்கள் !



 கடியப்பட்டணத்துக்குப் பஸ் விடக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்க திரண்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள்

கடியப்பட்டணம் தூய பேதுரு இளைஞர் இயக்கம் சார்பில் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடியப்பட்டணத்தில் இருந்து மணவாளக்குறிச்சி, குளச்சல் மற்றும் நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி கற்று வருகிறார்கள். இதற்காக கடியப்பட்டணத்தில் இருந்து முறையான பஸ் வசதி செய்து தரப்படவில்லை.

மினி பஸ்வசதியும் இல்லை. இதனால் தினமும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகிறார்கள்.

குறிப்பிட்ட நேரத்திற்குப் பள்ளிக்குச் செல்லாததால் படிப்பும் பாதிக்கப்படுகிறது. எனவே கடியப்பட்டணம் கிராமத்திற்கு உரிய பஸ் வசதி செய்து தரவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறி இருந்தனர். ஏராளமான மாணவ-மாணவிகள் ஒரே நேரத்தில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

நன்றி :மாலை மலர், 13-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.