Friday, November 30, 2012

தமிழ்நாட்டில் குடும்ப வன்முறை வழக்குகள் அதிகம்: பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல் !





சமீபத்தில் தேசியக் குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டுள்ள பட்டியலின்படி, நாட்டிலேயே தமிழகத்தில்தான் குடும்ப வன்முறைகள் அதிக அளவில் நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 9431 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 3983 வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இதில் பெண்களுக்கு எதிரான வன்முறை வழக்குகள் அதிகம் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 3266 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 1661 வழக்குகளும் பதிவாகியிருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணப் பிரிவு கூறுகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் பெண்கள் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 11 ஆயிரத்து 718 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2009-ல் 7 ஆயிரத்து 803 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை மக்களவையில் இன்றையக் கேள்வி நேரத்தின்போது, மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி கிருஷ்ணா தீரத் தெரிவித்தார்.

இதேபோல் மற்றொரு கேள்விக்குப் பதில் அளித்த கிருஷ்ணா தீரத், ‘பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக, தேசிய குழந்தை உரிமைப் பாதுகாப்பு ஆணையம் 36 வழக்குகளை கையாண்டுள்ளது.

 அதிலும் தமிழகத்தில் இருந்து அதிகபட்சமாக 21 புகார்கள் வந்துள்ளன. அடுத்து ஆந்திராவில் இருந்து 4 புகார்கள் வந்துள்ளன’ என்றார்.                                

நன்றி :-மாலைமலர், 30-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.