வின்மணியார் 09-11-2010-ல் பதிந்ததன் மீள்பதிவு:-
வரலாற்றுத் தகவல்களைப்பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்வதற்கு வசதியாக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
காலத்தால் என்றும் அழியாத பொக்கிஷங்களான வரலாற்றுத்
தகவல்களைப் பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு
தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில்
இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்றுப் புத்தகங்களை ஆன்லைன்
மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின்
நூலகம் உள்ளது.
இணையதள முகவரி : http://www.wdl.org
இந்தத்தளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்றுத் தகவல்களைத்
தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்றுப்
புத்தகங்களும் வரும்
இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாகத் தேடிப் படிக்கலாம். செல்லறித்துப்போன வரலாற்று செய்திகளைத் தூசுதட்டி மென்நூலகமாக கொடுத்திருக்கும் இந்ததளம் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைப்பற்றிய ஒரு சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.