ஆங்கிலேயர் காலத்திலிருந்து கிராமங்களில் இலவசக் கல்வி வழங்குவதற்காகத் தொண்டுள்ளமும் சமுதாய அந்தஸ்தும் உள்ள சிலரால் பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
இவற்றுக்கு "நிதி உதவிப் பள்ளிகள்' என்று பெயரிட்டு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியது. இப்போது தமிழ்நாட்டில் சுமார் 30,000 கிராமப்புற நிதி உதவிப் பள்ளிகள் நடைபெறுகின்றன.
இந்தப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அரசாங்கமே ஊதியம் வழங்கியது. ஆனால் பாடசாலை நடத்த இடம், கட்டடம் கட்டுதல், பராமரித்தல், தளவாடச் சாமான்கள், நூலகம், விளையாட்டுக் கருவிகள், எழுது பொருள்கள், குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து இன்றியமையாத செலவுகளையும் பள்ளி நிர்வாகியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இது பெரியச் செலவு என்று அரசே கருதியதால் ஆசிரியர்களின் அடிப்படை ஊதியத்தைக் கணக்கிட்டு அதில் 15% நிர்வாக மானியம் என்ற பெயரால் பாடசாலை நிர்வாகிக்கு வழங்கப்பட்டது.
ஆனால் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது ஊதியக்குழு பரிந்துரை மூலம் ஊதியம் அதிகமாகிக் கொண்டே வருவதால் இந்த மானியம் 12%, 10%, 6%, 4% என்று படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது வெறும் 2%தான் வழங்கப்படுகிறது.
விலைவாசி உயர்வு, வாழ்க்கைத் தரச் செலவு ஆகியவற்றை ஒட்டித்தான் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. அந்தப் பொருளாதாரக் காரணங்கள் தனியார் பள்ளி நிர்வாகிகளின் நிர்வாகச் செலவுக்குப் பொருந்தாதா?
மானியச் செலவைக் குறைத்துக் கொண்டே போனால் பள்ளியை எப்படி நிர்வகிப்பது என்று கல்வித்துறை அதிகாரிகள் சிந்திக்க வேண்டாமா?
மாநில அரசும் கல்வித்துறை அதிகாரிகளும் பார்க்கும் நிதி உதவிப் பள்ளிக்கூடங்கள் நகரங்களில்தான் பெரும்பாலும் இருக்கின்றன. அவற்றைப் போலவே கிராமப்புறப் பள்ளிகளும் வளமாக, கொழுகொழுவென்று இருப்பதாகக் கருதி இந்த வெட்டை அமல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நகர்ப்புற நிதி உதவிப் பள்ளிகளில் வசூலிக்கும் கூடுதல் கட்டணங்களைக் கிராமங்களில் வசூலிக்க முடியாது. அங்கே பெரும் பணக்காரர்கள் தரும் நன்கொடையைப் போல கிராமப் பள்ளிகளுக்குக் கிடைப்பதில்லை.
நிர்வாக மானியம் வழங்குதல், அங்கீகாரம் வழங்குதல் ஆகிய அதிகாரங்கள் தங்களிடம் இருப்பதால், கிராமப்புற நிதி உதவிப் பள்ளி நிர்வாகிகளைக் கல்வித்துறை அலுவலர்கள் மிகவும் மரியாதைக் குறைவாக நடத்துகிறார்கள்.
பள்ளியின் ஆசிரியர்களையும் பிற பணியாளர்களையும் நியமிக்கும் அதிகாரம் நிர்வாகிக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அவை முறையாக உள்ளனவா என்று சரிபார்த்து ஒப்புதல் வழங்கும் அதிகாரம் கல்வித்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் காலிப் பணியிடங்களை நிரப்பலாமா என்பதற்கே கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்பது இப்போது நடைமுறை.
இதனால் ஆசிரியர் ஒருவர் ஓய்வுபெற்று 2 ஆண்டுகள் ஆனாலும் காலியிடத்துக்கு ஆளை நிரப்ப மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அனுமதி தருவதில்லை. தலைமை ஆசிரியராக ஒருவருக்குப் பதவி உயர்வு வழங்கவும் இப்போது குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகின்றன. நிர்வாகிக்கு "சட்டம் தரும் அதிகாரங்களை', "நடைமுறையில்' கல்வித்துறை பறித்துக்கொண்டது.
கட்டட உறுதிச் சான்று, கட்டட உரிமைச் சான்று, சுகாதாரச் சான்று, தீயணைப்புத்துறைச் சான்று ஆகியவற்றை நிதி உதவிப் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து கல்வித்துறை ஆண்டுதோறும் கேட்டுப் பெறுகிறது.
அதற்காக ஆண்டுதோறும் சுமார் 20,000 முதல் 30,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் இந்தச் சான்றுகள் எவையும் அரசுப் பள்ளிகள் பெறத் தேவையில்லை!
நிதியுதவிப் பள்ளிகளிடம் மாவட்ட ஆட்சியர்களும் பாரபட்சமாகவே நடக்கின்றனர். நிதி உதவிப் பள்ளிகளில் செயல்படும் மாணவர் சத்துணவு திட்டத்துக்கான சமையலறைக் கட்டடம் அரசு செலவில் கட்டித்தரப்படுவதில்லை.
அதே போல பாத்திரங்களும் இலவசமாகத் தரப்படுவதில்லை. இங்கே ஏழைக் கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள்தான் படிக்கின்றனர் என்பதை அரசு கவனத்தில் கொள்வதே இல்லை. இச் செலவுகளை நிர்வாகிதான் ஏற்க வேண்டும் என்பதே "விதி'யாக இருக்கிறது.
அரசு மானியம் என்ற பெயரைக் கொண்டு ஏதோ லட்சக்கணக்கில் தருகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கூட பெறாத பள்ளிகளும் ஏராளமாக உள்ளன!
"சர்வ சிக்க்ஷ அபியான்' - அனைவருக்கும் கல்வி - என்கிற திட்டத்தின் கீழ் பாடசாலைக்கு நடுவண் அரசு கட்டடம் கட்டித்தருகிறது, ஏராளமாகப் பொருள் உதவிகளைச் செய்கிறது,ஆசிரியர்களையும் நியமிக்கிறது.
நிதி உதவிப் பள்ளிகள் இதிலும் ஒதுக்கப்பட்டுவிட்டன. புதிய கட்டடம் கட்டத்தான் மானியம் வழங்கப்படுவதில்லை, பழைய கட்டடங்களைப் பராமரிக்க ஒன்றியப் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 5,000 ரூபாய் நிதிகூட தரப்படுவதில்லை.
மாணவர் பயனடையத் தரப்படும் கற்றல் உபகரணங்கள், அறிவியல் ஆய்வுக்கூட உபகரணங்கள் கூட மறுக்கப்படுகின்றன.
அரசே நடத்தும் ஒன்றியப் பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் மற்றப் பள்ளிகளுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
15 ஆசிரியர்கள் பணியாற்றிய பள்ளிகளில் இன்றைக்கு 5 ஆசிரியர்களுக்குக் கூட வேலையில்லை. நிதி உதவிப் பள்ளிகள் தரமாக இருக்கின்றன என்று பெற்றோர் பாராட்டுகின்றனர்.
எல்லாவற்றையும்விட முக்கியம் ஏழைக் குழந்தைகளுக்குத் தமிழ் வழியில் சிறப்பாகக் கல்வி கற்பிக்கின்றனர். இப்பள்ளிகளை அரசு ஊக்குவிக்காமல் தண்டிப்பது போல நடப்பது முறையா?
எல்லாக் கோரிக்கைகளுக்கும் நிதி உதவிப்பள்ளிக்கூட நிர்வாகிகள் மாவட்டத் தலைவருக்கு ஓட வேண்டிய அவசியம் இல்லாமல் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரியிடமே முடித்துக்கொள்ளும் வகையில் அவருக்கு அதிகாரங்களை வழங்கினால்கூட நிர்வாகிகளின் செலவு, நேரம், அலைச்சல் பாதியாகக் குறையும்.
- எஸ். சிவப்பிரகாசம், தேசூர்
நன்றி:- கருத்துக்களம், தினமணி, 19-11-2012

0 comments:
Post a Comment
Kindly post a comment.