சர்வதேசப் பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட மிக வேகமாக உலகில் உள்ள கடல் மட்டம் உயர்ந்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருவதன் காரணமாகப் பனிக்கட்டிகள் உருகி அதனால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவது அனைவரும் அறிந்ததே.
இதனால், டோக்கியோ போன்ற கடற்கரையோரப் பகுதிகள் பலவும் நீருக்குள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சர்வதேசப் பருவநிலை மாற்றக் குழு கணித்ததை விட 60% வேகமாகக் கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதாகக் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதைச் செயற்கைக் கோள் மூலமாக அறிந்து அதனை விஞ்ஞானிகள் கணித்ததோடு ஒப்பிட்டதில் இந்த விவரம் தெரிய வந்தது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.