Friday, November 23, 2012

ரயில்வே ஸ்டேசன்களுக்கு சூரிய ஒளி மின் சக்தி : அசத்தும் ம.பி. !


போபால் : மத்தியப் பிரதேச மாநில அரசு, மாநிலத்தில் போபால் ரயில்வே டிவிசனிற்குக் கீழ்வரும் 5 ரயில்வே ஸ்டேசன்களுக்கு சூரிய ஒளி மின்சக்தியின் மூலம் மின்சாரம் வழங்கத் தீர்மானித்துள்ளது. இதன்மூலம், மின்வாரியத்திற்குத் தற்போது செலுத்தப்பட்டு வரும் மின்கட்டணம் பெருமளவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போபால் ரயில்வே டிவிசனின் புதிய டிவிசனல் ரயில்வே மேனேஜராகப் பொறுப்பேற்றுள்ள ராஜிவ் சவுத்ரி, தலைநகர் போபாலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, சூரிய ஒளியை பயன்படுத்தி, ரயில்வே ஸ்டேஷன்களைப் பசுமை ஸ்டேஷன்களாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்தியப் பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, போபால் ரயில்வே டிவிசனில் வரும் பதர்வாஸ், கொலாரஸ், சிவ்புரி, மோஹ்னா மற்றும் பனிஹார் ரயில்வே ஸ்டேசன்கள் சூரிய ஒளி சக்தியின் மூலம் மின்சாரத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதம் ஒன்றிற்கு ரூ. 40 ஆயிரம் என்ற அளவிற்கு மின் வாரியத்திற்குக் கட்டப்பட்டு வரும் பணம் மிச்சமாகும்.

இந்த ஸ்டேஷன்களுக்கு மின்சாரம் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷனிலும், 5 கிலோவாட்ஸ் திறன் கொண்ட சோலார் பவர் பிளாண்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளாண்ட்டில் உள்ள 800ஏஹெச் பேட்டரிகள் மற்றும் இன்வெர்ட்டரின் மூலம், ஸ்டேசனிற்குத் தேவையான மின்சாரத்தை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மின்சாரத்தை மேலும் சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட டி-5 பிட்டிங்ஸ், எல்இடி பல்புகள் மற்றும் சிஎப்எல் பல்புகள் இந்த ஸ்டேசன்களில் பெருமளவில் பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார்.                                                                                                                                           

நன்றி :- மாலை மலர், 23-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.