Wednesday, November 21, 2012

பூசணிக்காயை உடைக்காமலேயே அதிலுள்ள மொத்த விதைகளைக் கண்டுபிடிக்க உதவும் சித்தரின் பாடல் !





கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்


பாடலின் பொருள் :-



ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு

அதை மூன்று, ஆறு , ஐந்து,  இவற்றால் பெருக்கி ,

வருகின்ற விடையைப் பாதியாக்கி,

மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

விளக்கம் :- 


ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை  X என்க.

பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது 90X  ஆகும்

அதைப் பாதியாக்கினால் கிடைப்பது 45X ஆகும்

அதை மீண்டும் மூன்றால் பெருக்கக் கிடைப்பது 135X  ஆகும்

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை

 X=6  ஆறு  எனக்கொண்டால்,

(135 * 6 = 810)   135 ஐ ஆறால் பெருக்க வேண்டும் கிடைப்பது  810 ஆகும்

எனவே, பூசணியில் உள்ள விதைகளின்  எண்ணிக்கை 810 ஆகும்

அடுத்த முறை பூசணிக்காயை வாங்கும் போது

இந்தப் பாடலின் உண்மையைக் கண்டறிய முயற்சிக்கலாம் அல்லவா ?  

உதவியவர் :- வின்மணியார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.