மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30க்கு தூக்கில் இடப்பட்டார்.
அவருடைய கருணை மனுவை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று நிராகரித்தார். அஜ்மல் கசாப்பின் மனுவை, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே நிராகரித்திருந்தது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடத்ததப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். மற்ற பயங்கரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.
இந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கசாப் தரப்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.
மேலும், கசாப்பின் கருணை மனுவைத் தள்ளுபடி செய்யும்படி, குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. குடியரசுத் தலைவரின் முடிவைத் தொடர்ந்து, அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில அரசு உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Kindly post a comment.