நன்றி :- வின்மணி
பதிவின் தலைப்பை பார்த்ததும் ஆச்சர்யம் வரலாம் ஆனால்உண்மைதான் நம் கூகிள் உலகில் இருக்கும் பிரம்மாண்டமான
மீயூசியத்தை எல்லாம் சுற்றிபார்க்க நேரடியாக இப்போதே நம்மை
இலவசமாக அழைத்துச் செல்கிறது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
உள்நாட்டில் இருக்கும் மீயூசியத்திற்குச் செல்லக்கூட நேரம்
இல்லை. அப்படியே நேரம் கிடைத்தாலும் அங்கு சென்று
கூட்டத்துடன் அதன் அழகை ரசிக்க முடியவில்லை என்ற
வருத்தம் அனைவரிடமும் இருக்கும். இந்த வருத்தத்தைப்
போக்குவதற்காகக் கூகிள் முக்கிய மீயூசியத்தை ஆன்லைன் மூலம்
முப்பரிமானத்தில் ( 3D ) சுற்றிக்காட்டினால் எப்படி இருக்கும்
என்ற புதிய முயற்சியாக ஒரு இணையதளத்தை
ஆரம்பித்துள்ளது,
இதில் தற்போது உலகின் பிரம்மாண்டமான
மீயூசியத்தை பார்க்க நம்மை இப்போதே அழைத்துச் செல்கிறது,
இணையதள முகவரி : http://www.googleartproject.com
இந்தத்தளத்திற்குச் சென்று நாம் சுற்றிப் பார்க்க விரும்பும்
மீயூசியத்தைச் சொடுக்கினால் போதும்.
அடுத்து வரும் திரையில் முப்பரிமானத்தில் மீயூசியத்தைக் காட்டுவதோடு
மட்டுமல்லாமல் எங்கு செல்லவேண்டும் எந்தப் படத்தை, அரிய பொருளை பார்க்க வேண்டும் என்பதைச் சொடுக்கினால் போதும் அதன் முகப்பு தோற்றம் முதல் Side view வரை அனைத்தையும் முப்பரிமானத்திலே நாம் சென்று பார்ப்பதுபோல் காட்டுகின்றனர்.
வியப்பை மட்டுமல்ல விந்தையையும்காட்டி மறுபடியும் எந்த்துறையில் தான் கால் பதித்தாலும்அந்தத்துறையில் தான் வல்லவன் என்பதை நிரூபித்து
இருக்கிறது கூகிள், உள்நாட்டு நம் மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும், மீயூசியம் பார்க்க விரும்பும் அனைவரும்
இனி பைசா செலவில்லாமல் உலகின் முக்கிய மீயூசியத்தை
முப்பரிமானத்தில் பார்வை இடலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு
அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி :- வின்மணியார்:-
0 comments:
Post a Comment
Kindly post a comment.