Thursday, November 15, 2012

உங்கள் தளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா என்று சோதிக்க ஒரு ஆன்லைன் டூல்.

  நன்றி :- வின்மணி

புதிதாக இணையதளம் உருவாக்கினால் மட்டும் போதுமா ? 

நாம் உருவாக்கியதளம் படிப்பதற்கு எளிமையாக இருக்கிறதா ?

தேவையான இடங்களில் சரியான செய்தியைக் கொடுத்திருக்கிறோமோ

அத்தனை வயதினரும் படிக்கும் வண்ணம் நம் தளத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தை கள் இருக்கின்றனவா ?

 என்பதை ஆன்லைன் மூலம் சோதிக்க ஒரு தளம் உள்ளது

இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.                                          

படம் 1

படம் 2

இணையதள வடிவமைப்பு உருவாக்குவதற்கு நாம் எவ்வளவு சிரமம்
எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவிற்கு இணையதளத்தில்
பயன்படுத்தப்படும் வார்த்தைக்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சோதித்துக்
கொள்ள வேண்டும்

நம் தளத்தில் பயன்படுத்தி இருக்கும் அல்லது
பயன்படுத்தப்போகும் வார்த்தையைச் சோதிக்க ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.read-able.com

இத்தளத்திற்குச் சென்று  படம் 1-ல் காட்டியபடி இணையதளத்தைச்
சோதிக்க வேண்டும் என்றால் Test by URL என்ற மெனுவைச் சொடுக்கி
வரும் Web Address என்ற கட்டத்திற்குள் நம் இணையதள முகவரியை
கொடுத்து Calculate Readability என்ற பொத்தானைச் சொடுக்கினால்
போதும் அடுத்து வரும் திரையில் நம் இணையதளம் முழுமையாகச்
சோதிக்கப்பட்டு நமக்கு முடிவுகள் காட்டப்படும்.

எத்தனை வயதுள்ள குழந்தைகள் உங்கள் தளத்தை படிக்கும் படி இருக்கிறது என்றும் ,ஒவ்வொன்றும் விரிவாக நமக்குக் காட்டப்படும். இங்கு வரும் பச்சை
நிறம் அனைத்து வயதினமும் படிக்கும் வண்ணம் சிறந்த தளமாக
இருக்கிறது என்பதைக் காட்டவும், சிகப்பு வண்ணம் வார்த்தைகள்
அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ளும்படி இல்லை என்பதைக்
காட்டுவதற்காகவும் உள்ளது.

இணையதளம் உருவாக்கும் முன் வார்த்தைகளை சோதிக்க விரும்புபவர்கள் Test by Direct Input என்ற மெனுவை சொடுக்கி நேரடியாக வார்த்தைகளைக் கொடுத்துச் சோதித்துக்கொள்ளலாம்.

 Winmani.wordpress.com என்ற நம் தளத்தைக் கொடுத்துச் சோதித்துப் பார்த்தோம் முழுவதும் பச்சையாகக் காட்டியதைப் படம் 2 காட்டுகிறது.

இணையதளம் உருவாக்க விரும்புபவர்கள் முதல் இணையதளம் வைத்திருக்கும் அனைவரும்தங்கள் தளத்தை சோதித்துக்கொள்ள இந்தத்தளம் பயனுள்ளதாக இருக்கும்.                                                                                                     

நன்றி :- வின்மணியார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.