உலகத்தில் தீபாவளித் திருநாளுக்கு அரசு விடுமுறை உண்டா?
நம் தாய்த்தமிழ்நாட்டில் தமிழைப் படிக்காமலேயே பள்ளி மேனிலைப் படிப்பை முடித்து அடுத்த கட்டத்திற்குச் சென்று விடலாம். ஆனால், அண்டைத் தென் மாநிலங்களில் அவ்வாறு செய்திட இயலாது. ஆனால் ஓணம் போன்ற பண்டிகைகளை அரசு விடுமுறையாக அறிவித்து நமது பெருந்தன்மையைக் காட்டிக் கொள்வோம்.
இந்தவருடம் 13-11-2012 தீபாவளி வருகின்றது. இராகு காலம், எமகண்டம், முகூர்த்தநாள், பண்டிகைநாட்கள் பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷம் நாட்களைத் தெரிந்தெடுத்து வைத்துச் சென்று விட்ட முன்னோரின் தடத்திலேயே நம் வாழ்க்கைப் பாதை தொடர்கிறது.
தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவதற்குக் காரணம் நரகாசுரவதம் என்பர் பலர். சிவனடியார் திருக்கூட்டம் பிறிதொரு காரணத்தைக் கூறும்.
எது எப்படி இருந்தாலும் ஆண்டுதோறும் எல்லோரும் கொண்டாடும் சமரசப் பண்டிகையாக உருப்பெற்று விட்டது, தீபாவளி.
ஏழை எளிய குடும்பத்தினர், சிறுவர்-சிறுமியர்கள் உட்படத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உற்பத்தி செய்யும் பட்டாசுகளைக் கொளுத்தி வெடிக்க வைத்து வேடிக்கைத் திருநாளாகத் தீபாவளியைக் கொண்டாடுகின்றோம். மனமுவந்து நடத்தப்படும் தொண்டு நிறுவனங்களும் எவ்வாறோ தங்களைச் சார்ந்த குழந்தைகளுக்குத் தீபாவளிப் பண்டிகையின் ஏக்கம் ஏர்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளுகின்றன.இந்தியா முழுமைக்கும் அரசு விடுமுறையாகிவிட்டது, தீபாவளி.
இதேபோன்று உலகத்தில் வேறு நாடுகளில் தீபாவளிக்கு அரசு விடுமுறை உண்டா என்று தேடிப்பார்த்தால் பின் வரும் பட்டியலில் உள்ல நாடுகளைத் தாராளமாகச் சொல்லலாம். இந்தத் தகவலைத் தருவது, டைம்ஸ் ஆப் இந்தியா, ஆங்கில நாளிதழ், சனிக்கிழமை, 10. நவம்பர், 2012. வேறு நாடுகளில் தீபாவளிக்கு விடுமுறை உண்டா என்ற வினாக்களைக் கேட்கும் சுட்டிகளுக்கு விடையாகக் கூறிட இந்தப் பட்டியல் துணை செய்யும்.
1. NEPAL
2.SRI LANKA
3. MYANMAR
4. MARUITIUS
5.GUYANA
6.TRINIDAD & TOBAGO
7.SURINAME
8.MALAYSIA
9.SINGAPORE
10. FIJI
0 comments:
Post a Comment
Kindly post a comment.