லண்டன் மருத்துவ மனையில் சிக்கிச்சை பெற்றுவரும் மலாலா பூரண
குணமடைய எல்லாம் வல்ல இறையருளைத் தியானிப்போம் !http://world.thaalamnews.com/2012/11/10/pakistan-malala-day-is-observed-today-in-memory-of-the-girl-malala/
ஐ.நா.சபை : பாகிஸ்தானில் உள்ள சிறுமிகளுக்கு கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தி பிரசாரம் செய்த மலாலா யூசுப்ஜை என்ற சிறுமியை தாலீபான்கள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்கினர்.
இதில் படுகாயமடைந்த மலாலா இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மலாலாவை கவுரவிக்கும் விதமாக இன்றைய தினத்தை (நவம்பர் 10) மலாலா தினமாக கடைப்பிடிக்க ஐ.நா. அமைப்பு முடிவு செய்துள்ளது. இதனை ஐ.நா.வின் பொது செயலாளர் பான் கி-மூனின் உலகளாவிய கல்விக்கான சிறப்பு தூதரும், முன்னாள் இங்கிலாந்து பிரதமருமான கார்டன் பிரவுன் தெரிவித்தார்.
பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமி மலாலாவைக் கௌரவிக்கும் வகையில், ஐ.நா. சபை நவம்பர் 10ஆம் தேதியை மலாலா தினமாக அறிவித்துள்ளது.
நவம்பர் 10-மலாலா தினம்: ஐ.நா. சபை அறிவிப்பு :- தினமணி, 11-11-2012
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா என்ற பள்ளி மாணவி, பெண் கல்விக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். இதற்காக அவர் மீது தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படுகாயமடைந்த மலாலா, லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, உடல்நலம் தேறி வருகிறார். அவருக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மலாலாவை ஐ.நா. சபையும் கௌரவித்துள்ளது. இது குறித்து ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனின் உலகக் கல்விக்கான சிறப்புத் தூதரும், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமருமான கார்டன் பிரௌன் கூறுகையில், ""இந்த சனிக்கிழமை (நவம்பர் 10) மலாலா தினமாக அறிவிக்கப்படுகிறது. அவருக்கு ஆதரவாக அனைத்து இனங்களையும், நாடுகளையும் சேர்ந்த மக்கள் நிற்பதை இது உணர்த்துகிறது'' என்றார்.
பான் கி மூன், ஐ.நா. இணையதள விடியோவில் பேசுகையில், ""மலாலாவுக்காகவும், பள்ளிக்குச் செல்ல இயலாத 6 கோடியே 10 லட்சம் குழந்தைகளின் சார்பாகவும் உலகம் முழுவதும் உள்ள குடிமக்கள் கருத்து தெரிவிக்க உள்ளனர்.
பல நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தகவல் அனுப்ப உள்ளனர். அவர்களுடன் எனது ஆதரவுக் குரலையும் சேர்க்க உள்ளேன். கல்வி என்பது அடிப்படை உரிமை. அது, வளர்ச்சி, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான பாதையாகும். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்த ஐ.நா. பிரசாரத்தில் சர்வதேசச் சமூகம் பங்கேற்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
மலாலா தினத்தைக் குறிக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சியாரா லியோன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
:
0 comments:
Post a Comment
Kindly post a comment.