மானியம் இல்லாத கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்வு ரூ.950 ஆக அதிகரிப்பு
மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை வியாழனன்று மேலும் ரூ.26.50 உயர்த்தப்பட்டது. இதனால் இந்த சிலிண்டர் விலை சென்னையில் ரூ.950ஐ எட்டியது.
மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு ஆண்டொன்றுக்கு 6 மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
இந்த நிலையில் மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் தில்லியில் ரூ.895.50 என விற்கப்படுகிறது. தற்போது இதன் விலை மேலும் ரூ.26.50 அதிகரிக்கப்பட்டுள்ளதால், ஒரு சிலிண் டர் விலை ரூ.922 என தில்லியில் விற்கப்படும்.
14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண் டரை 6க்கும் மேல் வாங்கும் பட்சத்தில், ஒவ்வொரு கூடுதல் சிலிண்டருக்கும் சுமார் ஆயிரம் ரூபாயை தரவேண்டிய அபாயம் உள்ளது.
இந்தக் கடுமையான விலை உயர்வால் ஏழை, நடுத் தர மக்களின் வாழ்க்கை பரிதாபமாகியுள்ளது. ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்க வழிகாட்டும் மத்திய அரசு, சாதாரண ஏழை மக்களைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் சிலிண்டர் விலை யை உயர்த்தி உள்ளது.
மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் மானிய விலை யில் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை 6 என கட்டுப்படுத் தியது. மானிய விலையில் தில்லியில் ரூ.410.42க்கு எரிவாயு சிலிண்டர் விற்கப்படுகிறது.
சந்தை விலையில் இந்த சிலிண்டரை வாங்க இரு மடங்கு செலவு செய்யவேண்டும். மானியம் இல்லாமல் தரப்படும் சிலிண்டர்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். அதற்குக் கட்டுப்பாடு கிடையாது.
நன்றி :- தீக்கதிர், 02-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.