Friday, November 2, 2012

ஒத்து ஊதிக்கொண்டேஉறவு ! இல்லை என்றால் துறவு ! தாழ்வுறும்போதெல்லாம் ஜாதியை இழுக்கலாமா, கலைஞர் கருணாநிதி ?


பார்ப்பன சாதியில் பிறந்திருந்தால் எழுதியிருப்பார்களா?:

நக்கீரனுக்கு கருணாநிதி கேள்வி

 நன்றி  Sriram Senkottai,  அவர்களே ! தினமணி ,
First Published : 28 October 2012 06:20 PM IST

நக்கீரன் இதழ் கட்டுரை ஒன்றைக் குறிப்பிட்டு, பார்ப்பன சாதியில் நானும், இராசாத்தி அம்மாளும், கனிமொழியும் பிறந்திருந்தால், இப்படி எழுதியிருப்பார்களா? என்று கருணாநிதி அந்த இதழுக்குக் கேள்விக் கணை தொடுத்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 கருணாநிதியின் "கருணைப் பார்வை”க்கு நக்கீரனும் தப்பவில்லை என்பதைக் காட்டும் அந்தக் கேள்வி பதில் அறிக்கை...




கேள்வி:- “நக்கீரன்” வார இதழிலேயே “யாருக்கு யார் எதிரி” என்ற தலைப்பில்தங்கள் துணைவியாரைப் பற்றியும், மகளைப் பற்றியும், மகன்களைப் பற்றியும் பரபரப்பு காட்சிகள் என்றெல்லாம் கட்டுரை வெளியிட்டிருக்கிறார்களே?






கருணாநிதி:- தம்பிகள் டி.ஆர். பாலு, பழனி மாணிக்கம் இருவருக்கும் இடையேஉருவான பிரச்சினையில் நான் உடனடியாக எழுதிய “உடன்பிறப்பு” கடிதத்திற்குப் பிறகு இருவருமே அமைதியாகி விட்டார்கள். பிரச்சினையும் முடிந்துவிட்டது.

ஆனால் “நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர் களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர் வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள்.

இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது?  

இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும். 

இராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே; 

அதனால் எதையும் எழுதலாம் என்ற நெஞ்சுரமும் மனப்பான்மையும் “நக்கீரன்” போன்ற ஏடுகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் இல்லை. 

வாழ்க; தமிழ்ச் சமுதாயம்! வாழ்க, வாழ்கவே!

0 comments:

Post a Comment

Kindly post a comment.