Friday, November 2, 2012

அட்சயதிருதியை நாளில் நான்கு பேருக்கு அன்னதானம் செய்தாலே செல்வம் நம்மைத் தேடி வரும். -வின்மணி சிந்தனைகள் - பகுதி -1



01. உண்மையும் முயற்சியும் இருந்தால் கிடைக்கும்
      வெற்றி ஒரு போதும் நம்மை விட்டு விலகாது.

02  கடவுள் உண்மையிலே கல்நெஞ்சக்காரன் தான்
      நல்லவர்களைத்தான் அதிகம் சோதிக்கின்றான்.

03. அழகான நண்பர்கள் வாழ்க்கையில் கிடைப்பது
       பூர்வ ஜென்மத்தில் நாம் செய்த புண்ணியம்.

04.  நல்லவர்களுக்குத்தான் சோதனை அதிகமாக வரும்
      ஒரு போதும் அதைக்கண்டு வருந்தி நிற்க வேண்டாம்.

05.  பயிற்சியும் முயற்சியும் இருந்தால் வெற்றி என்பது
       நம் அருகில்தான் இருக்கிறது.

06.  மகிழ்ச்சியையும் அன்பையும் நம்
      விரோதிகளுக்குப் பரிசாக அளிப்போம்.

07. பொன்னும் பொருளும் நிரந்தரமல்ல
      அன்பு மட்டுமே நிரந்தரம்.

08.  சரியான துறையில் கிடைக்கும் தகுந்த வேலைக்காக
       பல காலம் காத்திருப்பதில் எந்தத் தவறும் இல்லை.

09.  அட்சயதிருதியை நாளில் நான்கு பேருக்கு அன்னதானம்
       செய்தாலே செல்வம் நம்மைத் தேடி வரும்.

10.   மனதில் இரக்கம் இல்லாதவன் மிருகத்தை
       விடக் கொடிய உயிரினம்.                                              

நன்றி :- வின்மணி






0 comments:

Post a Comment

Kindly post a comment.