Friday, November 2, 2012

87ஆண்டுகளாகச் சேர்ந்து வாழும் தம்பதி: உலகின் நீண்ட நாள் ஜோடி சாதனை !

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கரம்சந்த். இவருக்கும், கதாரி என்பவருக்கும் 1925-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கரம்சந்த்- கதாரி தம்பதியருக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அவர்கள் மூலம் இத்தம்பதிக்கு 28 பேரன், பேத்திகள் உள்ளனர்.

பஞ்சாபில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்த இத்தம்பதிகள் கடந்த 87 ஆண்டுகளாகக் கணவன்- மனைவியாக வாழ்ந்து வருகிறார்கள். இதன்மூலம் உலகில் நீண்ட நாட்களாகச் சேர்ந்து வாழும் தம்பதி என்ற புதிய சாதனையைக் கரம்சந்த்- கதாரி தம்பதியினர் படைத்துள்ளனர்.

அவர்களது இந்த சாதனை விரைவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. கரம்சந்துக்கு தற்போது 107 வயதாகிறது. அவரது மனைவி கதாரிக்கு 100 வயதாகிறது. உலகின் நீண்டநாள் தம்பதியரான இவர்கள் பற்றி லண்டனில் உள்ள பத்திரிகைகள் சிறப்புச் செய்திகள் வெளியிட்டுள்ளன.

அவர்கள் தங்கள் வாழ்க்கை வெற்றி பற்றிக் கூறுகையில், நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதே இல்லை. எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம். அதனால்தான் இவ்வளவு நாட்கள் சேர்ந்து வாழ முடிந்துள்ளது என்று கூறியுள்ளனர்.

நன்றி :- மாலை மலர், 02-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.