ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் நேற்று அந்த வகுப்புக்குச் செல்ல வேண்டிய ஆசிரியர் விடுமுறையில் இருந்ததால், அந்த வகுப்பறையில் மாணவர்களும், மாணவிகளும் தொடர்ந்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தனர்.
அந்த வகுப்புக்குள் நுழைந்த 35 வயதான மற்றொரு ஆசிரியர் மதன் கோபி, அங்கு சத்தம் போட்டு கொண்டிருந்த மாணவி ஜாஸ்மி முர்முவைக் கத்தியால் குத்திக் கொன்றார்.
பின்னர் 10 வயதான சிவநாத் டிக்கி என்ற மற்றொரு மாணவனின் கழுத்தைக் கத்தியால் கிழித்தார். இதில் மாணவி ஜாஸ்மி மர்மு சம்பவ இடத்திலேயே பலியானார். கழுத்து அறுபட்ட மாணவன் சிவநாத் டிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்தச் சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டு விரைந்து வந்த கிராமத்தினர், ஆசிரியர் மதன் கோபியை பிடித்துத் தாறுமாறாக அடித்து உதைத்துப் பின்னர் போலீசில் ஒப்படைத்தனர் என்று ஜார்கண்ட் மாநிலப் போலீசார் இன்று நிருபர்களிடம் கூறினார்கள்.
நன்றி :-மாலை மலர் 02-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.