Thursday, November 8, 2012

கருப்புத் தங்கம் எனப்படும் குப்பை !- 750 மில்லியன் டாலர் அந்நியச் செலாவணியைச் சேமித்திட ஓர் வழி! -த சன்டே இந்தியன்

 prasoonsmajumdar.blogspot.com/
 





Editor, Economic Affairs -
The Sunday Indian,
Dean Academics (All India),
The Indian Institute of Planning and Management


நகர்ப்புறங்களில் குப்பைகள் பெருகி வருகின்றன.திடக் கழிவுகள் காசாக்கப்படுகின்றன. இது குறித்த பிரச்சினையில் ஒப்பந்தக்காரர்களுக்கும், மாஃபியாக்களுக்கும் மோதல் ஏற்படுகின்றது. பெங்களூரூவில் குப்பைகள் சேகரிப்பதில் மாஃபியாக்கள் ஏகபோகம் செய்தபோது, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் குப்பைகளை மறுசுழற்சி செய்து கழிக்கும் சில நடைமுறைகளைக் கொண்டுவர முயன்றது. இதற்குப் பதிலடியாக மாஃபியாக்கள்  தடை செய்யப்பட்ட இடங்களிலும், தூய்மையான பகுதிகளிலும் மலை போலக் குப்பைகளைக் குவித்துவிட்டனர்.

ஒப்பந்தக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளும் இப்பிரச்சினையை மேலும் சிக்கலாக்கின. பெங்களுரூவில் மட்டும் இந்த குப்பை வர்த்தகம் 430 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

கருப்புத் தங்கம் என அழைக்கப்படுகின்றது குப்பை. 

பெஙளூரூ மாநகராட்சி அதிரடிப்படை மேற்கொண்ட நடவடிக்கையில் 2008-ல் 80 அதிகாரிகளும், 40 ஒப்பந்தக்காரர்களும் இந்தக் குப்பைகளை நிர்வகிப்பதில் முறைகேடு செய்துள்ளாதாக விசாரணையில் வெளியானது. 

பெங்களுரூவில் குப்பை அகற்றுவதற்காக 430 கோடி செலவிடப்படுகின்றது. மும்பை பெங்களுரூவைவிட இரண்டு மடங்கு மக்கட் தொகை கொண்டது. ஆனால் அங்கு ஆகும் செலவோ 190 கோடிதான். டெல்லியில் 170 கோடியும், சென்னையுல் 130 கோடியும் செலவிடப்படுகின்றது.                         

குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழந்தைகள் காகிதம், பிளாஸ்டிக் பாட்டில்கள் இவற்றைப் பொறுக்கி மிகக் குறைந்த வருவாயைப் பெருகின்றனர். ஆனால், இவர்களை நியமிப்பவர்களோ அவற்றை அதிகப் பணத்திற்கு விற்று லட்சக் கணக்கில் சம்பாதிக்கின்றனர். 

இந்த ஒருங்கிணைக்கப்படாத தாதாக்களால் செய்யப்படும் குப்பை நிர்வாகத்தைத் தனியார்மயமாக்கல் வழியாகவே சரி செய்ய முடியும். இதுதான் உலக நாடுகள் பலவற்றிலும் நடந்துள்ளது.தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தை விட்டுவிட்டால் அவர்கள் நேரடியாக வந்து குப்பைகளை எடுத்துக்கொண்டு மறு சுழற்சிக்கு வாய்ப்புள்ள பொருட்களைத் தன்னுடைய சொந்த உபயோகத்திற்கே பயன்படுத்தும்.

குப்பையாகப் போடப்படும் காகிதங்களிலிருந்து 80 சதவிகிதம் கச்சாப் பொருளை எடுத்துக் கொண்டுதான் காகிதத் தொழில் இயங்குகின்றது. அந்தக் காகிதங்கள்தான் 750 மில்லியன் டாலர் விலையில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகின்றது. வளர்ந்த நாடுகளில் மறுசுழற்சி செய்யப்படும், நார்ப் பொருட்கள் 40 சதவிகிதம் எனில், இந்தியா 20 சதவிகிதத்தை மட்டுமே பயன்படுத்துகின்றது.

அரசு குப்பை நிர்வாகத்தையும் அதில் நடக்கும் வர்த்தகத்தையும் புரிந்துகொண்டு பெரிய நிறுவனங்களிடம் இதை நிபுணத்துவத்துடன் கையாளுவதற்கு ஒப்படைக்க வேண்டும். 


சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்காத பெரு நிறுவனங்களை ஊக்குவிப்பதாகவும் இந்த நடவடிக்கை அமையும். அத்துடன் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் இழப்பும் குறையும்.

எல்லாவற்றிற்கும் மேலாகச் சாலைகள் சுத்தமடையும். மாஃபியாக்களின் பிடியிலிருந்து குப்பை பொறுக்கும் சிறுவர்களும் தப்பிப்பார்கள்.

நன்றி :- த சன்டே இந்தியன், தேசத்தின் தலை சிறந்த செய்தி இதழ்.  அண்மைய விலை ரூ.10/-  




சிந்தனைக்குரிய கருத்துக்கள் :-

1.குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும்  குழந்தைகளுக்குக்  கட்டாயக் கல்வி அளிக்கும் பணியை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அந்தக் குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் பொழுது தாதாக்களின் எடுபிடிகளாகி வாழ்க்கைச் சிதைவுக்குள்ளாவதைத் தடுக்க முடியும்.

2. அந்தோணி இருதயதாசன் என்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்  10-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரது பொருளியல் கொள்கைகள் ஓர் ஆய்வு என்னும் நூலை திருச்செந்தூர் தமிழாய்வு மன்றம் 1999-ல் வெளியிட்டுள்ளது. ஐந்து பேராசிரியர்கள் அந்த நூலைத் தொகுத்துள்ளனர். தமிழ் ஆய்வு மன்றம், திருச்செந்தூர், 628 215.

வெளியீடு :-
ஏழை நாடுகளின் பொருளாதார வளர்ச்சி இயக்கம்,
131, பிச்சிவிளை-628 219
தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு.

மேற்படி ஆய்வு நூலில் இடம்பெற்ற கருத்துக்களில் முக்கியமானது, உள்நாட்டிலேயே தயாரித்துக் கொள்ள வாய்ப்பும் வசதியும் உள்ளவற்றை அந்நிய நாட்டிலிருந்து வாங்கி, நம்நாட்டின் அந்நியச் செலாவணியை வீணாக்கக் கூடாது என்பதாகும். அதையே த சன்டே இந்தியனும் வற்புறுத்துகின்றது.

சரியாகத் திட்டமிட்டால் அரசாங்கமே அரிதின் முயன்று வெளிநாடுகளிலிருந்து காகிதங்கள் வாங்குவதற்காகச் செலவிடப்படும் 750 மில்லியன் டாலரை மிச்சப் படுத்திட முடியும். முற்சி செய்தால், காகிதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திடவும் முடியும்.

சேரன்மாதேவியில் உள்ள ஆதித்தனார் சன் பேப்பர் மில்லில், உடை மரங்கள், காகிதக் குப்பைகள் முதலியவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பேப்பர்களில்தான் அந்தக்காலத்தில் தினத்தந்தி அச்சானது. தற்பொழுது, ராணி, ராணிமுத்து போன்ன்றவற்றிற்குப் பயன் படுத்தப்படுகின்றது. வெளியாருக்கும் விற்கப்படுகின்றது. 


மாறிய காலச்சூழலில், வாங்கப்பட்டுள்ள புதியமெஷினரிகளுக்கு சன் பேப்பர் மில்லில் தயாரிக்கப்படும் பேப்பர்களைப் பயன்படுத்த இயலாததே இதற்குக் காரணம். அந்தக் காலத் தலைவர்களிடம் குடிகொண்டிருந்த சுதேசிப் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நாட்டுப்பற்று இல்லாத குறைகளைச் சுட்டிக்காட்டவே இந்ததத் தகவலும் சேர்க்கப்பட்டுள்ளது.   




 

0 comments:

Post a Comment

Kindly post a comment.