Monday, November 12, 2012

பணம் கேட்டு மிரட்டிய போலி பத்திரிகையாளர்கள் 5 -வரைக் கைது செய்யக் காவல் நிலையத்துக்கு ரகசியமாகத் தகவல் தந்த புத்திசாலியான டாக்டர் !

சென்னை டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டித் தாக்கியதாக 5 போலி பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்துப் போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

திருவொற்றியூர் சத்தியமூர்த்திநகரைச் சேர்ந்தவர் டாக்டர் வெங்கடேஷ்வரலு (32). இவர் அங்கு கிளினீக் வைத்து நடத்தி வருகிறார். இவரது கிளினீக்குச் சனிக்கிழமை 5 பேர் வந்தனர்.

அவர்கள் தாங்கள் பத்திரிகையாளர் என்று கூறிக் கொண்டு, வெங்டேஷ்வரலுவை மிரட்டனார்களாம். எம்.பி.பி.எஸ். படிக்காமலே சிகிச்சை அளிப்பதாகவும், அது குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வைப்போம் எனவும் மிரட்டினராம்.

உடனே வெங்கடேஷ்வரலு தனது படிப்புக்குரிய சான்றிதழை எடுத்துக் காட்டினாராம். இருப்பினும் அந்தக் கும்பல் அவரிடம் ரூ. 5 ஆயிரம் வேண்டும் எனவும், மாதந்தோறும் தங்களுக்கு ரூ. 5 ஆயிரம் மாமூல் தர வேண்டும், இல்லையெனில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஏதாவது பொய்ப் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைப்போம் என மீண்டும் மிரட்டியதாகத் தெரிகிறது.

இது குறித்து டாக்டர், சாத்தங்காடு காவல் நிலையத்துக்குச் ரகசியமாகத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று அங்கு பத்திரிகையாளர் என மிரட்டிக் கொண்டிருந்த காசிம், ரவிக்குமார், மகேஷ், செந்தில், ரவி ஆகிய 5 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர்களில் காசிம் தவிர மீதி 4 பேரும் எந்த பத்திரிகையிலும் இல்லை என்பதும், காசிம் மட்டும் ஒரு சிறு பத்திரிகையில் வேலை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் வெங்கடேஷ்வரலு கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் 5 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.





நன்றி :-தினமணி, 12-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.