Wednesday, November 7, 2012

23 செய்திகள்...சில வரிகளில் - நன்றி : 07-11-2012 தினமணி ! 2 ஆசைகள். !தினமணி மக்கள் மணி !


0

ந்தியாவாகும் அமெரிக்கா என்பது தலையங்கத்தின் தலைப்பு. முழுவதும் படித்தால்தான் அமெரிக்காவின் தேர்தல் பரப்புரைகளில் இந்தியாவின் நடைமுறைச் செயல்பாடுகள் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளன என்பது தெரியவரும்.

2.அமெரிக்க அதிபர் ஒபாமாவா அல்லது குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரோம்னியா என்ற முடிவும், சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி,ஓய்வு பெறக்கூடிய அதிபர் ஹூஜிண்டாவுக்கும், பிரதமர் வென் ஜியாபாவுக்கும் மாற்றாக, ஜி ஜின்பிங்கையும், லீகெகியாங்கையும் தேர்ந்தெடுத்து அறிவிக்கும் முடிவும் இந்த வாரத்தில் தெரியவரும் இரண்டு முக்கிய உலக நிகழ்வுகள்.இவை குறித்தே இன்றையத் தலையங்கம்.

3. தமிழகத்தில் 36 கோடியில் நவீன சேமிப்பு-குளிர்பதனக் கிடங்குகள் -தமிழக முதல்வர்.அறிவிப்பு.

4. மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காகப் பணியாற்றுவோருக்கு மாநில விருதுகள்- தமிழக அரசு அறிவிப்பு.

5.எண்ணெய்க் கசிவால பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு ரூ.47,000/-வீதம் இழப்பீடு. பேச்சு வார்த்தையில் தீர்வு. ( நாகை )

6.நீலம் புயலில் ஐந்து பேரைக் காப்பாற்றிய மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம் பரிசு- தமிழக முதல்வர் அறிவிப்பு.

7. காங்கிரஸ் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரிய ஜனதாக் கட்சியின் தலைவர், சுப்பிரமணிய சுவாமியின் மனுவினைத் தெர்தள் ஆணையம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்போவதாக சாமி அறிவிப்பு.

8.சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை ஆரம்பம்.

9.சென்னையில் குறுகிய தெருக்களில் தீயை அணைத்திட மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம். இது புதிய திட்டம். 27 இடங்களில் தீயணைப்புத் துணை நிலையங்கள் அமைப்பு.

10.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், ரூ.16,080 செலுத்தி விளக்கங்கள் கேட்டவருக்குப் பதிலாக  அனுப்பப்பட்ட 2228 பக்க ஆவணங்களில் 1,700 பக்கங்கள் வெற்றுத் தாள்களாகவே இருந்தன.

 தகவலறியும் மனுவிற்குப் பக்கத்திற்கு ரு.2/- வசூலிப்பதற்குப் பதில்,ரூ. 5/- வசூலித்துள்ள தவறும் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம்,பெரசும்பி கிராமப் பஞ்சாயத்திற்குட்பட்ட ஏரியில் இருந்த கருவேல மரங்கள், சென்ற ஆண்டு ஜூலை முதல் தேதிரூ.39,24,00/- -க்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ளது என்ற புகாரும் உள்ளது.

வசூலான ஏலத் தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதும் , மேலும் சில கேள்விகளையும் அதே கிராமத்தைச் சேர்ந்த கே. சீனிவாசன் எழுப்பியதற்குக் கிடைத்ததே இந்தப் பதில். மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

11.சாலைகள், பள்ளிக் கட்டிடங்கள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பொதுமக்களின் பங்களிப்புடன் பூர்த்திசெய்யும் தன்னிறைவுத் திட்டம் சென்னை மாநகராட்சியில் அமுல்படுத்த உள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மாணாக்கர்களுக்கான சத்துணவுத் திட்டம், இலவச சைக்கிள்கள், கணினிகள், செருப்புகள் இன்னோரன்ன அனத்து இலவசத்திட்டங்களையும்  முழுமையான அளவில் , அரசின் உதவியின்றிப் பொதுமக்களின் பங்களிப்பிலேயே நிறைவேற்றும் திட்டமாக்கிச் செயல்படுத்தினால், அரசாங்கப் பட்ஜெட்டில் இவற்றிற்காகப் பணம் ஒதுக்க வேண்டிய அவசியமே ஏற்படாது; பட்ஜெட்டில் துண்டு விழும் நிலையும் வரவே வராது.மது பானக் கடைகளை மூடவதற்கான  வழியும் ஏற்படும்.

12.சென்னை சென்ட்ரலுக்குக் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் 22 மணி நேரம் தாமதமாக வந்தது.

13.சென்னை பாரி முனைப் பகுதியில் பட்டாசுக் கடைகளை அனுமதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

14. சென்னை, ஆவடி,செக் போஸ்ட் அருகே பைரவர், பிறைசூடர், அம்மன் சிலைகள் சாலயில் சாக்கு மூட்டைகளில் கிடந்தன.

15.விழுப்புரம், ஜானகிபுரம் நான்கு வழிச்சாலையில், ஆம்னி பஸ்ஸில் போலீஸ் உடையில் வந்த மர்ம நபர்கள் வியாபாரியைத் தாக்கி 10 லட்சம் கொள்ளை அடித்துள்ளனர்..

16.எஸ்.எம்.எஸ். மூலம் மோசடி செய்த நைஜீரிய இளைஞர்கள் நான்குபேர் காரைக்காலில் கைது.

17. குமரி அருகே கடலில் மாயமான ஆறு மீனவர்கள் கரை திரும்பினர்.

18. மதுரை: பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் இருவர் சாவு. போலீசார் மீது கல் வீச்சு, தடியடி.

19.தென்மாவட்டங்களில் அமைதியை வலியுறுத்தி நவம்பர் 10-ல் இடதுசாரிகள் உண்ணாவிரதம்.

 இடதுசாரிகள் தென்மாவட்டம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று அமைதியை ஏற்படுத்திட வேண்டும். கந்திஜியின் பாதையைப் பின்பற்ற வேண்டும்.
மதுரையில் காவலர்கள்  பதுகாப்போடு ஒரு நாள் உண்ணவிரதம் இருப்பதும், தினசரிகளில் உருக்கமான வேண்டுகோள் அறிவிப்பு விடுவதும் ஒன்றுதான். !
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுக என்று முக்கியப் பிரச்சினைகளுக்கு அறிக்கைவிடும் கம்யூனிஸ்டுகள் இதற்கு மட்டும் ..............?

20. கூடங்குளம்:- ஆவணங்களைத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது

21.நீரா ராடியா தொலைபேசி உரையாடலை வரிவடிவத்தில் தர உச்சநீதி மன்றம் உத்தரவு.

22. நாட்டின் எந்தப் பகுதியிலும் ரயில்வே மேம்பாலம் கட்ட 50% நிதி வழங்கத் தயார்.ரயில்வே இணை அமைச்சர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி அறிவிப்பு.

23. ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா.தடை.

ஒவ்வொரு பத்திரிக்கையின் பின்னாலும் ஒரு அரசியல் இருக்கும். தினமணிக்கும் இருக்கக் கூடும். ஆனால், சாமான்யத் தமிழ் மகனும் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளைப் பாரபட்சமற்ற முறையில்வெளியிடுவதில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கின்றது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

தினமணியின் மக்கள் பணி தொடரட்டும் ! வாழிய, வாழியவே !

0 comments:

Post a Comment

Kindly post a comment.