Friday, November 16, 2012

மாணவர்களுக்கான மலிவு விலை கணினி ஆகாஷ் 2 அறிமுகம் !

மாணவர்கள் பயன்படுத்தும் அதிநவீன உள்ளடக்க பயன்பாடுகளைக் கொண்ட ஆகாஷ்-2 கையடக்கக் கணினியை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமையன்று தலைநகர் தில்லியில் அறிமுகம் செய்தார்.

இந்த கையடக்ககணினி மாணவர்களுக்கு ரூ.1130 விலையில் விற்கப் படுகிறது. இந்த புதிய வடிவக் கணினி 1 ஜிகா ஹெர்ட்ஸ் திறனில் இயங்கும் பிராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் தற்போது 512 மெகா பைட்ஸ் உள்ளது. 7 இன்ச் தொடுதிரையுடன் உள்ள இந்த கணினியை பேட்டரியிலும் இயக்கலாம். இதனை 3 மணி நேரம் சாதாரணச் செயல்பாடுகளுக்குப் பயன் படுத்தலாம்.

ஐஐடி மும்பை, இந்தகையடக்கக் கணினியை, சி.டாக்சின் முழு ஆதரவுடன் உருவாக்கியுள்ளது. இந்த ஆகாஷ்-2 கணினியை ரூ.2263க்கு மத்திய அரசு வாங்கி 50 சதவீத அரசு மானியத்துடன் ரூ.1130 விலைக்கு மாணவர்களுக்குத் தருகிறது என டேடாவின்ட் தலைமைச் செயல் அதிகாரி சுனீத்துளி கூறினார்.

மாநில அரசுகளும் இதற்கு மானியம் அளிக்கும் பட்சத்தில் இந்த கணினியை இலவசமாகப் பெற்றுப் பயன்பெறலாம். இதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பொறியியல் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழகங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு 1 லட்சம் கணினிகள் தரப்படுகின் றன. பின்னர் இதர மாணவர் களுக்கு அளிக்கப்படுகிறது.

அடுத்த 5-6 ஆண்டுகளில் நாட்டின் 22 கோடி மாணவர்கள் ஆகாஷ்-2ஐப் பெறுவார்கள். திங்கட்கிழமையன்று 20 ஆயிரம் கணினிகள் மாணவர்களுக்கு தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லினக்ஸ் செயல்பாட்டு முறையி லும் கணினி இயங்கும் ஆதார் அங்கீகாரம் தூரத்தில் உள்ள ரோபட்டை இயக்குதல் போன்ற செயல்பாடுகளுக்காகவும் இந்த கணினியைப் பயன்படுத்த முடியும் என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரிகள் கூறினர்.

கல்லூரிகளில் உள்ள 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, கல்விப் பயன்பாட் டுக்கான ஆகாஷ் பயன்பாடு குறித்த பயிற்சி தரப்பட்டுள்ளது.

ஐஐடி மும்பை அறிவிப்புப்படி, குழு திட்ட சாராம்சங்களை உருவாக்குவதற்கு மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் கணினியை இயக்கி, பொருளாதாரரீதி யாக பின்தங்கியுள்ள கிராமப்புறக் குழந்தைகளும், மற்றவர்களைப் போல நல்ல கல்வி பெறகவனம் செலுத்துவோம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிமுகம் செய்துள்ள ஆகாஷ்-2 கணினி அமைச்சர் களுக்கு அனுப்பப்பட்டு கருத்து கேட்கப்பட்டது. கல்வியில் பெரும் மாற்றம் ஏற்படுத்தும் எனப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார். ஐஐடி மாணவர்களுக்கு கணினியை வழங்க தொழிலாளர் துறை அமைச்சகம் கேட்டுள்ளது.                                                             

நன்றி :- தீக்கதிர், 16-11-2012

1 comments:

  1. வணக்கம் இநத கணினி ஆகாக்ஷ்-2 வாங்க வேண்டும். முகவரி தரவும் நன்றி email: nakkeeran1964gmail.com

    ReplyDelete

Kindly post a comment.