முன்பதிவு ரயில் பயணிகள் அனைவரும் பயணத்தின்போது அசல் அடையாள அட்டை அவசியம் கொண்டுவர வேண்டும் என ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த முறை டிசம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தட்கல், இ-டிக்கெட் முறையில் முன்பதிவு செய்யும் பயணிகள் அடையாள அட்டையை பயணத்தின்போது கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. அடையாள அட்டை இல்லாத பயணிகள் டிக்கெட் இல்லாதவர்களாகவே கருதப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
தட்கல், இ-டிக்கெட்களில் பெரும்பாலானவற்றை ஏஜென்ட்கள் முன்பதிவு செய்வதால் கவுன்ட்டரில் வாங்கக் காத்திருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை ஏஜென்ட் அதிக விலைக்கு விற்பதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இந்த முறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளும் பயணத்தின்போது அசல் அடையாள அட்டையக் கொண்டுவர வேண்டும் என இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்து இரயிலில் பயணிக்கும் அனைவரும் அடையாள அட்டை கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலியான பெயரில் யாரும் பயணிக்க முடியாது.
மேலும் டிக்கெட் முன்பதிவில் ஏஜென்ட்களின் மூலம் நடைபெறும் முறைகேடுகளும் குறைக்கப்படும்.
இந்த முறை வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
அடையாள அட்டைகள் எவை?:
அடையாள அட்டைகளாக வாகன ஓட்டுநர் உரிமம்,
பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை,
பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்குப் புத்தகம்,
அரசால் வழங்கப்பட்ட பதிவு எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றுகள்,
ஆதார் அட்டைகள் உள்ளிட்டவைகள் ஏற்றுக்கொள்ளப்படும்
நன்றி :- தினமணி :- 03-11-2012
Saturday, November 3, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.