Thursday, November 8, 2012

கோயம் பேட்டில் 16 முன்பதிவு மையங்கள்- அதிகக் கட்டணம் வாங்கும் ஓம்னி பஸ்கள்மீது புகார் செய்யத் தொடர்பு எண்கள் !



தீபாவளிக்கு  6859 சிறப்பு பஸ்கள் இயக்கத் தமிழக முதல்வர் உத்தரவு !

அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இம்மாதம்

 9 ஆம் தேதி 768 பேருந்துகளும்,

10-ஆம் தேதி 633 பேருந்துகளும்,

11-ஆம் தேதி 543 பேருந்துகளும்,

12-ஆம் தேதி 884 பேருந்துகளும் , மற்றும்

மாநிலம் முழுவதிலும் இருந்து,

9-ஆம் தேதி 925 பேருந்துகளும்,

10-ஆம்தேதி 940 பேருந்துகளும்,

11-ஆம் தேதி 977 பேருந்துகளும்,

12-ஆம் தேதி 1189 பேருந்துகளும்

ஆக மொத்தம் 9-தேதியிலிருந்து 12-ஆம் தேதி வரை 6859 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பண்டிகை முடிந்த பின்பு மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம் இதே அளவிலான பேருந்துகள் 13-ஆம் தேதியிலிருந்து, 16-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன.

ஆன் லைனில் பதிவு செய்ய, www.tnstc.in -என்ற இணைய தளத்தைப் பயன்படுத்தலாம்.

தீபாவளி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் பின்வரும் செல்போன் எண்களில் புகார் செய்யலாம்.

9444015958 ,9444855428  -

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தின் பெயர், பஸ்ஸின் என், பயணக் கட்டண விபரம் குறித்து போனிலேயே புகார் தெரிவிக்கலாம்.


 

0 comments:

Post a Comment

Kindly post a comment.