உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கள்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது. உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
படம்
1
முக்கியமான நபர்களின் தகவல்களைத் தெரிந்து கொள்ள நாம் உடனடியாக
நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவைத்
தான். ஆனால் சில நேரங்களில்
குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள்
போதுமான அளவு இல்லை என்று
நினைக்கும் நபருக்குப் பிரபலங்களின் விபரங்களைக் கொடுக்க ஒரு தளம்
உதவுகிறது.இணையதள முகவரி : http://www.yatedo.com
உலக
அளவில் முக்கிய நபர்களை எளிதாகத்
தேடிக் கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்குச் சென்று
நாம் படம் 1-ல் காட்டியபடி
யாரைப்பற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து
Enter பொத்தானைச் சொடுக்கித் தேட வேண்டியது தான்.
தேடல் முடிவில் யாரைப்பற்றிய
தகவல் வேண்டுமோ See profile என்பதைச் சொடுக்கி அவரின்
முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இத்தேடலில் இந்தியாவைக் காட்டிலும் வெளிநாட்டினர் விபரங்களே அதிகம் கிடைக்கிறது. முக்கியமான
நபர்களின் விபரங்களை தேடும் நபர்களுக்கு இத்தேடுபொறி
பயனுள்ளதாக இருக்கும்
நன்றி :-வின்மணி
0 comments:
Post a Comment
Kindly post a comment.