கடந்த 12 வருடங்களில் இந்திய ராணுவத்தினர் 4000 பேர் உயிரிழப்பு: ஏ.கே. அந்தோணி
1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போருக்குப் பிறகு கடந்த 12 வருடங்களில் இந்திய இராணுவத்தினர் 4000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி இன்று சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1999-ம் ஆண்டு கார்கிலில் தீவிரவாதிகள் ஊடுருவியபோது, அவர்களைத் தடுக்க நடந்த "விஜய் ஆபரேசன்" எதிர்தாக்குதலில் 530 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர்.
அதன் பிறகு 2000-ம் ஆண்டு முதல் 2012 வரை தீவிரவாதிகளுடன் நடந்த பல்வேறு மோதல்களில் 3,987 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்து உள்ளனர்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 394 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
கடந்த 20 வருடங்களில் இந்தியாவின் காஷ்மீர் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுவருலைத் தடுக்கவும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வரும் நக்சலைட் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கவும் அங்கு இந்திய இராணுவத்தினர் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
2009-ம் ஆண்டு 7499 பேர், 2010-ம் ஆண்டு 7249 பேர் இராணுவத்திலிருந்து முன்கூட்டி ஓய்வு பெற்றுள்ளனர்.
கடுமையான பணிக் காரணமாக இராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள் முன்கூட்டிய பதவியிலிருந்து விலகுகின்றனர் என்று இதை எடுத்துகொள்ளமுடியாது.
கடந்த மூன்று வருடங்களில் 25,000-க்கும் மேற்பட்ட இளநிலை ஆணைய அதிகாரிகள் முன்கூட்டியே பதவியை விட்டு விலகியுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நன்றி :- மாலைமலர், 26-11-2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.