உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் புற்று நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். குடல் புற்று நோயினால் மட்டும் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் பலியாகின்றனர். இந்த நோய்க்கு மருந்து மாத்திரை மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது குடல் புற்று நோயின் வேகத்தைக் குறைக்க நிபுணர்கள் புதிய மருந்து கண்டு பிடித்துள்ளனர். அப்ளி பெர் செட் என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து புற்று நோய் தாக்கிய செல்கள் பலவிதமாக உடைந்து மேலும் பரவாமல் தடுக்கும். இதன் மூலம் புற்று நோயின் வீரியம் குறையும்.
இந்த மருந்தின் மூலம் இங்கிலாந்தில் 1400 புற்று நோயாளிகளிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. எனவே இந்த மருந்தை வேறு வகைப் புற்று நோய்களுக்கும் பரிசோதனை செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
சாப்பிட்ட 30 நிமிடத்தில் இந்த மருந்து செயல்படத் தொடங்கும். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அதற்கான அனுமதி விரைவில் கிடைக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நன்றி :- மாலைமலர், 26-11-2012
Monday, November 26, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.