Monday, November 5, 2012

இந்திய அமுதபானம் குடித்ததால் இளமைப் பொலிவு: 110 வயது பிரிட்டன்காரர் தகவல் !

இந்தியாவில் தாம் குடித்த அமுத பானமே தம்மை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளது என்று மனம் திறந்தார் 110 வயது பிரிட்டிஷ் காரர்.

பிரிட்டனில் மிகவும் வயதான நபர் எனக் கூறப்படும் ரெக் டீன், தனது 110 வது பிறந்த நாளை ஞாயிற்றுக் கிழமை கொண்டாடினார்.

இந்த வயதிலும் சுறுசுறுப்பாக ஆரோக்கியமாக இருக்க என்ன காரணம் என்று பலரும் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அவரின் மகன் கிறிஸ்டோபர், என் அப்பா இளைய வயதில் ஒரு முறை இந்தியாவில் பயணம் செய்தாராம். அப்போது இந்தியாவில் மருத்துவர் ஒருவர், சேற்றைப் போன்ற நிறமுடைய பானம் ஒன்றைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னாராம். இந்த பானத்தைக் குடித்தால் நூறு வயது வாழலாம் என்றாராம். அந்த விநோத அமுதத்தைக் குடித்ததால் தாம் புத்துணர்ச்சியுடன் இருந்ததாக அவர் கூறியுள்ளார் என்றார் கிறிஸ்டோபர்.

ரெக் டீன், தேவாலயம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் அதில் இருந்து 80 வது வயதில்தான் ஓய்வு பெற்றார்.                                                                                         

நன்றி :- தினமணி, 05-11-2012                                                                          






0 comments:

Post a Comment

Kindly post a comment.