தீபாவளி முதல் தந்தி டி.வி. ஆரம்பம் !
மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத பாமரனையும் தமிழைக் கற்றுக் கொள்ள வைத்தது தினத்தந்தி.!
காலம் தந்த கட்டாயத்தால் - சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால், திராவிட முன்னேற்றக் கழகக் “கொள்கைகளை” ( ? )பட்டி தொட்டி எங்கும் பரப்புரை செய்திடக் காரணமாக இருந்தது தினத்தந்தி.
விரும்பும் பெயரில் பத்திரிக்கையின் பெயரைப் பதிவு செய்ய இயலாவிட்டால், பெயருக்கு முன் ஒரு பெயரைச் சேர்த்துக் கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம் என்ற புதிய பாதையைக் காட்டியது தினத்தந்தி. உதாரணம், வாராந்தரி ராணி. ஆனால், ராணி என்றே மக்கள் மத்தியில் இன்றும் பிரபலம்.
மாதமொரு நாவலுக்கு வழிவகுத்ததும், தினத்தந்தி, “ராணி முத்து”
மாவட்டம்தோறும் பதிப்புக்களைக் கொண்டுவர வழிகாட்டியதும் தினத்தந்தி !
இரவில் கடைசி நிமிடம் வரை காத்திருந்து புதிய புதிய செய்திகளைத் தலைப்புச் செய்திகளாகத் தந்து கொண்டிருப்பதும் தினத்தந்தி.
உலகச் செய்திகளை-புதுமைச் செய்திகளை முதலில்,பிழையின்றி வழங்கி வருவதும் தினத்தந்தி.
தற்பொழுது, வருகின்ற தீபாவளித் திருநாள் முதல் தொலைக் காட்சித் துறையிலும் பீடுநடை இடப் போகின்றது. புதுமைகளை எதிர்பார்ப்போம் !
0 comments:
Post a Comment
Kindly post a comment.