Tuesday, October 9, 2012

இங்கிலிஷ்-விங்லிஷ்- TOEFL , G MAT- தமிழக முதல்வர் !

Directed by Gauri Shinde
Produced by Sunil Lulla
R. Balki
Rakesh Jhunjhunwala
R. K. Damani
Screenplay by Gauri Shinde
Story by Gauri Shinde
Starring
Music by Amit Trivedi
Cinematography Laxman Utekar
Editing by Hemanti Sarkar
Studio Hope Productions
IBC Spotlight
Distributed by Eros International
IBC Motion Pictures
Release date(s)
  • 14 September 2012 (Toronto International Film Festival)
  • 5 October 2012 (India)
Running time 129 minutes
Country India
Language Hindi
Tamil
Telugu
Box office INR14.25 crore (US$2.69 million)
(4 days domestic nett)[1][2] 


ஆங்கிலத்தில் பேசத் தெரியாத தாய், தன் வாரிசுகளிடம் படும் பாடே படத்தின் மையக் கரு. ஸ்ரீதேவியை  26 ஆண்டுகளுக்குப்பின் இந்தியிலும், 14 ஆண்டுகளுக்குப்பின் தமிழிலும் ஒரே நேரத்தில் நடிக்கவைத்த படம். தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின்றது.

அதிகாரபூர்வமாக உலகில் திரையிடப் படுவதற்கு முன்பாகவே , 14-09-2012-ல் டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

நிகழ்ச்சி முடிவிற்குப்பின் எல்லோரும் எழுந்து நின்று நெடுநேரம் கரகோஷம் எழுப்புவதே மேலை நாடுகளில் பாராட்டை வெளிப்படுத்தும் சிறப்புமுறை. அவ்வகையில் ஸ்ரீதேவியின் நடிப்பு பாராட்டைப் பெற்றது சிறப்பம்சம்.

அக்டோபர் 5-ல் இந்தியாவில் திரையிடப்பட்டது. 

இந்தப் படத்தை நமது தமிழக முதல்வர் பார்த்தாரோ இல்லையோ நமக்குத் தெரியாது. ஆனால், இந்தியாவில் ஆட்சிமொழியாக மட்டுமே உள்ள இந்தியைக் கற்றுவிட்டால் , வேலை கிடைத்துவிடும் என்பது குதிரைக்குக் கொம்பு முளைப்பது போன்றதற்கொப்பாகும் என்பதை நமது முதல்வர் நன்கறிவார். இணைப்பு மொழியாக ஆங்கிலம் மட்டுமே காலந்தோறும் என்ற உண்மையையும்  எடுத்துச் சொல்லவேண்டிய நிலையில் அவரும் இல்லை.

எனவேதான், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலக் கல்லூரி, தொழில் நுட்ப, தொழில் பயிற்சிக் கல்லூரி ஆகிய விடுதிகளில் தங்கிப் பயில்வோரின் ஆங்கிலச் செம்மைக்காக, 1,83, 00000 ரூபாய் ஒதுக்கி, சுமார் 7000 மாணாக்கர்களின் வருங்கால வள வாழ்விற்கு அடித்தளமிட்டுள்ளார்.

தன்னைப்போல் தனது ஆளுகைக்குட்பட்ட ஒருபகுதி மாணாக்கர்களுக்கு ஆங்கிலப் பயிற்சிக்கு வழிவகுத்த தமிழக முதல்வரை மனமாறப் பாராட்டுவோம்.

இது இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை அல்ல. என்னதான் பொறியியல் / மருத்துவத் துறை வல்லுநராக இருந்தாலும் ஆங்கிலப் புலமை இல்லையென்றால் . வேலைக்காயினும் சரி/ மேற்படிப்பிற்காயினும் பிற நாடுகளுக்குச் செல்ல இயலாது.  இந்தியாவில் நல்ல வேலையில் அமர்ந்திடவும், ஆங்கில அறிவும் கணினித் தொழில் நுட்பத் தெளிவும் அவசியம் வேண்டும்.

வெளிநாடு சென்றிட TOEFL , G MAT  போன்ற தேர்வுகளில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். எனவே,    அனைத்து மாணாக்கர்களுமே ஆங்கிலத்தில் புலமைபெற நமது தமிழக முதல்வர் வழிவகைகள் செய்திடல் வேண்டும்.

அவ்வாறு செய்துவிட்டால் 

நாளைய உலகம் 

நம் தமிழக  இளைஞர்களிடம்தான்.! 

உலகம் உள்ளவரை 

 தமிழக முதல்வர் டாக்டர்

செல்வி ஜெயலலிதாவின் புகழும்

நிலைத்திருக்கும் !  




0 comments:

Post a Comment

Kindly post a comment.