Friday, October 26, 2012

அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை..!

  

சென்னை, அக்.26 -​ அந்தமான் அருகே புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் 29-​ந்தேதி மழை தீவிரமாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்துச் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:-​

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரம் அடைந்து புயல் சின்னமாக ஆப்பிரிக்க நாடு அருகே சென்று உள்ளது. இந்த புயலுக்கு நூர்ஜான் என்று பெயர் வைத்துள்ளனர்.

சோமாலியா அருகே இன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகத் தமிழ்நாடு,​ புதுச்சேரி வானிலையில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. வடக்கு அந்தமானில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை அங்கேயே நிலை கொண்டு உள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது படிப்படியாக நகர்ந்து வரும் போது 29-​ந்தேதி தமிழ்நாட்டில் கன மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்த வரை அவ்வப்போது மழையை எதிர்பார்க்கலாம்.

இவ்வாறு ரமணன் கூறினார்.                                                                                                  

நன்றி :- தினபூமி , 26-10-2012                                                           






0 comments:

Post a Comment

Kindly post a comment.