Friday, October 26, 2012

சமையல் கேஸ் சிலிண்டர்களை எடை போட்டே தரவேண்டும் -உச்சநீதிமன்றம் ஆணை !



இனி சமையல் கேஸ் சிலிண்டர்களை

வாடிக்கையாளர்கள் முன்பு 

எடை போட்டுத் தரும்மாறு 

உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதி மன்றம். 

மானிய விலையில் கொடுக்கப்படும் சமையல் கெஸ் சிலிண்டரின் விலை தற்போது 398 ரூபாயாக இருக்கிறது. ஒரு வருடத்தில் வீட்டு உபயோகத்திற்கு ஆறு சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் , மேற்கொண்டு சிலிண்டர் வாங்கினால் 882 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது, மானியம் இல்லாத சிலிண்டரின் விலையில், சர்வதெச கச்சா எண்ணேய், எரிவாயு விலைக்கேற்ப ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

இந்த நிலையில் ஹோட்டல் போன்ற நிறுவனம் சார்ந்த வணிக உபயோக சிலிண்டருக்கான விலை 1500 ரூபாய் வரை உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டலிருந்து கேஸ் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்பட்டு வணிக உபயோக சிலிண்டர்களுக்கு மாற்றி சப்ள்ளை செய்வதாய்ப் புகார்கள் எழுந்தன. அதுமட்டுமன்றி டெலிவரி தேதி ஒன்றாகவும், பில்லில் உள்ள தேதி வேறாகவும் இருப்பதாகவும் புகார்கள் பதிவாகி உள்ளன. சமையல் கேஸ் சிலிண்டரின் எடை குறைவாக உள்ளதாகப் பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்புக் கவுன்ஸில் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப் பட்டது.

இந்த வழக்கில் நுகர்வோருக்கு சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்கள் எடை இயந்திரத்தையும் கையோடு கொண்டு சென்று சிலிண்டரின் எடையைச் சரிபார்த்து வழங்க ஏற்பாடு செய்வதாக மத்திய பெட்ரோலியம் அமைச்சகம் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நுகர்வோரின் வீட்டு வாசலில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எடை சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது. மேலும் இந்தத் தகவலை ஊடகங்கள் மூலமாக அரசு, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.                                                                                                                   
---------------------------------------------------------------------------------------------------------------

கூடுதல் கட்டணமா ? புகார் செய்க ! 

கேஸ் சிலிண்டர் சப்ளை ஐந்து கி.மீ. தூரத்திற்குட்பட்டதாக இருந்தால் எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கவேண்டும். ஏனெனில், மானிய சிலிண்டரின் விலையான 398 ரூபாயில் ஏஜென்ஸிக்கு உரிய கமிஷன், போக்குவரத்துச் செலவு, வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கும் செலவு ஆகியவை உள்ளடங்கியிருக்கின்றன. சிலிண்டர் விலையை விட  அதிகமாகப் பணம் கொடுக்குமாறு நுகர்வோரை நிர்ப்பந்திக்கக் கூடாது. அப்படிக் கேட்கும் பட்சத்தில் ஏஜென்சிக்குப் புகார் கொடுத்துவிட்டு சம்பந்தப்பட்ட நுகர்வோர் உணவுப்பொருள் வழங்கல் துறையிலும் புகார் தெரிவிக்க வேண்டும்.   
----------------------------------------------------------------------------------------------------------------
தகவல் உதவி :- புதிய தலைமுறை, 01, நவம்பர், 2012
-----------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

Kindly post a comment.