Friday, October 26, 2012

நாம் இருப்பது தமிழகத்திலா ? வாழிய தமிழக முதல்வர் !


மாணவ, மாணவியரின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய பிற நடைமுறைகள் விவரம்:

* பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1,500-க்கும் அதிகமாக இருந்தால் முறையான முழுநேர மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளிகளில் முதலுதவிப் பெட்டிகள் அனைத்து மருந்துப் பொருள்களுடன் அமைக்கப்பட வேண்டும்.

* பள்ளி மாணவர்களின் ரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை வைத்திருக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளிக் ம் கிணறு, கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.

* 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

* அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள், ஸ்விட்ச் போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்களில் உள்ள பழுதை நீக்கி பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

* உடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த, துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள் போன்றவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

* வீர விளையாட்டுகள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுகள் விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதியுடன் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

* வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றுள்ளனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதிசெய்த பிறகே பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.                                                                                                   

நன்றி :- தினமணி, 26-10-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.